முட்டாள் வணிகன்
14 பங்குனி 2023 செவ்வாய் 10:51 | பார்வைகள் : 16574
ஒரு ஊருல ஒரு வியாபாரி இருந்தாரு,அவருக்கு ஒரு மகன் இருந்தான் அவனுக்கு படிப்பறிவே இல்லாம முட்டாளா இருந்தான்கொஞ்ச காலத்துக்கு அப்புறமா அந்த வியாபாரி இறந்து போனாரு.
அவருக்கு அப்புறமா அந்த கடையை அவரோட மகன் எடுத்து நடத்த ஆரம்பிச்சான்பக்கத்துக்கு கடை காரர்கள் எல்லாரும் ஒருநாள் சந்தைல பேசிகிட்டு இருந்தாங்க,
அப்ப ஒரு வியாபாரி சொன்னாரு எண்ணை விலை எல்லாம் ஏறிடும் போல இருக்கு.
அதனால எல்லாரும் எண்ணய விக்காம எல்லாத்தையும் பதுக்குனா ,அடுத்த மாசம் நல்ல லாபத்துக்கு விக்கலாம்னு ஒரு வியாபாரி சொன்னாரு.
உடனே தன்னோட கடைல இருந்த எல்லா எண்ண பீப்பாயையும் எடுத்துட்டு வீட்டு தோட்டத்துக்கு வந்தான் அவன்
முட்டாளான அவன் ஒரு பெரிய குழிய வெட்டி பீப்பாய திறந்து அந்த எண்ணெய எல்லாம் அந்த குழியில ஊத்துனான்.
குழியிலே விழுந்த எண்ணெய் எல்லாம் வீனா போச்சு,அந்த விஷயத்த தெரிஞ்ச எல்லாரும் அவன முட்டாள் வியாபாரினு சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க


























Bons Plans
Annuaire
Scan