எரிபொருள் இறக்குமதியை குறைக்க மின்மயமாக்கல் திட்டம்: பிரதமர் Sébastien Lecornu அறிவிப்பு !!
11 சித்திரை 2026 சனி 07:45 | பார்வைகள் : 360
பிரதமர் Sébastien Lecornu, அரசின் தலைமையகமான Matignon அலுவலகத்தில் இருந்து நாட்டின் ஆற்றல் சுயநிறைவை வலுப்படுத்தும் நோக்கில் "மின்மயமாக்கல் திட்டத்தை" அறிவித்துள்ளார். எரிபொருள் இறக்குமதியிலான சார்பை குறைப்பதே இந்த திட்டத்தின் முக்கிய இலக்காகும். உலகளாவிய அரசியல் பதற்றங்களால் எரிபொருள் விலைகள் உயர்ந்துள்ள நிலையில், எதிர்கால நெருக்கடிகளை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம் என அவர் வலியுறுத்தினார்.
இதன் ஒரு பகுதியாக, மின்மயமாக்கலுக்கான அரசின் ஆண்டு நிதி 5.5 பில்லியன் யூரோவிலிருந்து 10 பில்லியன் யூரோவாக உயர்த்தப்படுகிறது. 2026ஆம் ஆண்டின் இறுதிக்குள் புதிய கட்டிடங்களில் எரிவாயு வெப்பமூட்டிகள் நிறுவ தடை விதிக்கப்படும் என்றும், அதற்கு பதிலாக வெப்ப மாற்றி இயந்திரங்கள் பயன்படுத்த பொதுமக்களுக்கு அரசுதவி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2030க்குள் ஆண்டுதோறும் 10 இலட்சம் வெப்ப மாற்றி இயந்திரங்கள் நிறுவ இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், மின்சார வாகன பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் சமூக வாடகை அடிப்படையிலான கொள்முதல் திட்டம் மீண்டும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. 2030க்குள் புதிய வாகனங்களில் பெரும்பாலானவை மின்சார வாகனங்களாக மாற்றப்பட வேண்டும் என அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. மேலும், சிறு தொழில்கள், விவசாயம் மற்றும் தொழில்துறை உபகரணங்களையும் மின்மயமாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan