பந்துகளை சிக்ஸருக்கு பறக்க விட்ட முகுல் சவுத்ரி - KKR-ஐ வீழ்த்தி LSG அபார வெற்றி
10 சித்திரை 2026 வெள்ளி 16:11 | பார்வைகள் : 1067
ஐபிஎல் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றுள்ளது.
2026 ஆம் ஆண்டின் 15 வது ஐபிஎல் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின. இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற லக்னோ அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதல் பாதியில் 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 181 ஓட்டங்கள் குவித்தது.
KKR அணியில் அதிகபட்சமாக கேப்டன் ரஹானே 24 பந்துகளில் 41 ஓட்டங்களும், ஆங்ரிஷ் ரகுவன்ஷி 33 பந்துகளில் 45 ஓட்டங்களும் குவித்தனர்.
182 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய LSG அணியில் தொடக்க வீரர்களான மிட்செல் மார்ஷ்(15) மற்றும் எய்டன் மார்க்ரம்(22) என சொற்ப ஓட்டங்களில் வெளியேறினர்.
கேப்டன் ரிஷப் பண்ட் 10 ஓட்டங்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். இருப்பினும் பின்னர் வந்த ஆயுஷ் பதோனி 34 பந்துகளில் 54 ஓட்டங்கள் குவித்தார்.
இதையடுத்து களமிறங்கிய முகுல் சவுத்ரி தனது அதிரடியான ஆட்டத்தால் போட்டியின் போக்கை முற்றிலுமாக மாற்றினார்.
கடைசி ஓவரில் 14 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், முகுல் சவுத்ரி 2 சிக்சர்களை பறக்கவிட்டு லக்னோ அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
முகுல் சவுத்ரி 27 பந்துகளில் 54 ஓட்டங்கள் குவித்து அசத்தினார். இதன் மூலம் லக்னோர் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan