ஜனாதிபதி அநுரவிற்கு நன்றி தெரிவித்த தமிழக முதலமைச்சர் விஜய்
12 வைகாசி 2026 செவ்வாய் 18:17 | பார்வைகள் : 143
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வாழ்த்துச் செய்திக்கு, தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்ற ஜோசப் விஜய்க்கு அண்மையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
அந்த வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டிருப்பதாவது,
"தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள கௌரவ சி. ஜோசப் விஜய் அவர்களுக்கு எனது வாழ்த்துகள். இலங்கையும் தமிழகமும் வரலாறு, கலாசாரம், வணிகம் மற்றும் மக்களிடையேயான நீடித்த உறவுகளால் பிணைக்கப்பட்டுள்ளன" என ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
அவரது வாழ்த்துக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தமிழக முதலமைச்சர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டிருந்தார். அதில்,
"இலங்கையின் கௌரவ ஜனாதிபதி அவர்களின் வாழ்த்துக்களால் பெருமகிழ்ச்சி அடைகிறேன். உங்களது கனிவான இந்தச் செயலுக்கு எனது நன்றிகள்" எனப் பதிவிட்டுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan