பிரமிக்க வைக்கும் தீவை விற்கும் பிரித்தானிய தம்பதி
12 வைகாசி 2026 செவ்வாய் 13:29 | பார்வைகள் : 330
லண்டனைச் சேர்ந்த தம்பதி தங்களது ஸ்கொட்லாந்து தீவினை 1.25 மில்லியன் பவுண்டுகளுக்கு விற்கின்றனர்.
பிரித்தானியாவின் லண்டனைச் சேர்ந்த வயதான தம்பதி ரிச்சர்ட் ஸ்டெய்ன், சல்லி லோவெல். இவர்களுக்கு சொந்தமாக, ஸ்கொட்லாந்தின் Argyll கடற்கரைக்கு அப்பால் உள்ள ஹார்பர் தீவு ஒன்று உள்ளது.
வழக்கறிஞர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, 2017யில் தனது நேரத்தைக் கழிக்கும் ஒரு திட்டமாக ஹார்பர் தீவினை வாங்க ரிச்சர்ட் முடிவு செய்தார்.
பின் அதே ஆண்டில் இந்த தீவிற்கு தனது மனைவியுடன் குடிபெயர்ந்திருக்கிறார். பின்னர் அங்கு வீட்டை புதுப்பித்தல், மின் வயரிங் மாற்றுதல், குழாய் வேலைகள் மற்றும் மைய வெப்பமூட்டும் அமைப்பை நிறுவுதல் போன்ற பணிகளைத் தொடங்கினர்.
2018ஆம் ஆண்டில் பெரிய விரிவாக்கத்தை செய்து, 2022-யில் ரிச்சர்ட் உள்ளூர் மரங்களைக் கொண்டு ஒரு இணைப்புக் கட்டிடத்தைத் தானே கட்டினார்.
என்றாலும், அந்தத் தீவு வனவிலங்குகளால் நிறைந்துள்ளது என்றும், பறவைகளை அடிக்கடி பார்ப்பதாகவும், ஒரு கடல்நாய் கூட சில வாரங்களுக்கு அங்கு வந்து தங்கியதாகவும் ரிச்சர்ட் கூறுகிறார்.
ரிச்சர்ட், சல்லி தம்பதி தங்களது தீவினை 1.25 மில்லியன் பவுண்டுகளுக்கு விற்பனைக்கு வைத்துள்ளனர். பொருட்கள் வாங்க 9.7 ஏக்கர் பரப்பளவு உள்ள இந்த தீவில் இருந்து படகில்தான் வெளியே செல்ல வேண்டும்.
இருப்பினும் தீவினை எளிதில் அடைய முடியும் என்றும், அருகிலுள்ள பல்பொருள் அங்காடிக்கு செல்ல 20 நிமிடங்கள் மட்டுமே ஆகும் என்றும் ரிச்சர்ட் கூறுகிறார்.
மேலும் அவர் கூறுகையில், "இந்தத் தீவில் வாழ்வது அற்புதமாக இருக்கிறது. காட்சிகள் அசாதாரணமானவை. இது இருப்பதற்கு மிகவும் நம்பமுடியாத ஒரு இடம்" என்றார்.
இங்கிலாந்தின் தெற்கில் உள்ள தங்கள் குடும்பத்தினருடன் நெருக்கமாக இருப்பதற்காக ரிச்சர்ட் மற்றும் சாலி ஹார்பர் தம்பதி தீவை விற்க வேண்டும் என்ற கடினமான முடிவை எடுத்துள்ளனர்.
'Savills' நிறுவனத்தின் மூலம் இந்தத் தம்பதியினர் தங்கள் சொத்தை 1,250,000 விலைக்கு விற்பனைக்கு அறிவித்துள்ளனர். மேலும், இந்த சொத்து தங்கள் கையை விட்டுப் பிரிவதைப் பார்ப்பது மிகவும் கடினமாக இருக்கும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan