இங்கே அனைவரும் சமம்; சட்டசபையில் முதல்வர் விஜய் பேச்சு
12 வைகாசி 2026 செவ்வாய் 13:26 | பார்வைகள் : 146
இங்கே அனைவரும் சமம். ஓர் உறுப்பினரை கொண்ட கட்சிகளுக்கும் அதிக உறுப்பினர் கொண்ட கட்சியின் கருத்துக்களுக்கும் சமமாக மதிப்பளிக்கப்படும் என சட்டசபையில் முதல்வர் விஜய் பேசுகையில் தெரிவித்தார்.
மக்களே மக்களுக்காக, மக்களால் நடத்தும் ஆட்சி மக்கள் ஆட்சி என்ற ஆபிரஹாம் லிங்கன் உரையை குறிப்பிட்டு முதல்வர் விஜய் தனது உரையை துவங்கினார்.
விஜய் பேசியதாவது:
மக்களின் எதிர்பார்ப்புகளை அவைக்கு கொண்டு வந்து அதனை செயல்படுத்துவதற்காக திட்டங்களை, சட்டங்களை அமல்படுத்தும பொறுப்பு இந்த அவைக்கு வந்துள்ளது. அதிகமான மக்கள் அதிக நன்மைகளை பெற்றுள்ளார்கள் என்ற வகையில் நமது செயல்பாடுகள் அமைய வேண்டும்இங்கே அனைவரும் சமம்.
ஓர் உறுப்பினரை கொண்ட கட்சிகளுக்கும் அதிக உறுப்பினர் கொண்ட கட்சியின் கருத்துக்களுக்கும் சமமாக மதிப்பளிக்கப்படும்.
நல்லது ஏற்கப்பட்டு அல்லவை நிராகரிக்கப்பட வேண்டும்.வரலாற்று சிறப்புமிக்க இந்த அவையை வழிநடத்தும் பண்பை பெற்ற தலைவரே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் எம்எல்ஏக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிப்பார்கள். அவையின் மாண்பையும், கண்ணியத்தையும் எம்எல்ஏக்களின் கண்ணியத்தையும் காக்கும் பொறுப்பு உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல் என்ற வள்ளுவரின் குரலுக்கு ஏற்ப, சட்டப்பேரவை நடவடிக்கைகள் சீராக, செம்மையாக அமைதியாக நடைபெறும் வகையிலும், சட்டப்பேரவை ஜனநாயக பண்புகள், ஜனநாயக நெறிகள் பேணிப் பாதுகாப்பதில் பேரவைத் தலைவரும் துணைத் தலைவரும் செயல்படுவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு விஜய் பேசினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan