Paristamil Navigation Paristamil advert login

ஈரானின் எச்சரிக்கையால் அதிரும் உலகம்

ஈரானின் எச்சரிக்கையால் அதிரும் உலகம்

12 வைகாசி 2026 செவ்வாய் 05:28 | பார்வைகள் : 1527


ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையிலான மோதல் போக்கின் முக்கிய கட்டமாக, ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாப் ஈரானிய படைகள் எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் பதிலடி கொடுக்கத் தயாராக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தமது பதிலடியைக் கண்டு அமெரிக்கா"ஆச்சரியப்படும்"என்றும், ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஈரான் ஒரு மறக்க முடியாத பாடத்தைக் கற்பிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, பாகிஸ்தான் ஊடாக ஈரான் அனுப்பிய அமைதித் திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிராகரித்திருந்தார்.

ஈரானின் பதில் அறிக்கை ஒரு "குப்பை" என்று விமர்சித்த அவர், ஈரானுடனான போர்நிறுத்த ஒப்பந்தம் தற்போது மிகவும் பலவீனமான நிலையில் இருப்பதாகவும், அது தோல்வியடைய 99வீத வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து, அமெரிக்கா "நியாயமற்ற கோரிக்கைகளை" முன்வைப்பதாகவும், ஈரானின் நிபந்தனைகள் மிதமிஞ்சியவை அல்ல என்றும் ஈரானின் வெளியுறவு அமைச்சகம தெளிவுபடுத்தியுள்ளது.