சபாநாயகராக போட்டியின்றி தேர்வாகிறார் ஜே.சி.டி. பிரபாகர்
12 வைகாசி 2026 செவ்வாய் 07:47 | பார்வைகள் : 1331
தமிழக சட்டசபை சபாநாயகராக தவெக எம்எல்ஏ ஜேசிடி பிரபாகர் போட்டியின்றி தேர்வாகிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மே 12 வெளியாகிறது.
தமிழகத்தில் தவெக தலைமையிலான புதிய அரசு அமைந்துள்ளது. அக்கட்சியின் தலைவர் விஜய் தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். தற்காலிக சபாநாயகர் கருப்பையா தலைமையில் சட்டசபை கூட்டம் நடந்தது. அவர் புதிய எம்எல்ஏக்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த சூழலில் மே 12 சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தல் நடைபெறுகிறது.
இதில். சபாநாயகர் வேட்பாளராக ஆளும் தவெக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ ஜேசிடி பிரபாகர் வேட்புமனு தாக்கல் செய்தார். வேறு யாரும் வேட்பு மனுவை தாக்கல் செய்யவில்லை.
இதையடுத்து, அவர் போட்டியின்றி தேர்வாகிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு முறைப்படி அறிவிக்கப்படுகிறது. இதேபோல, துணை சபாநாயகராக துறையூர் தவெக எம்எல்ஏ ரவிசங்கரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளார். இதற்கான அறிவிப்பும் வெளியாகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan