Paristamil Navigation Paristamil advert login

லூவர் அருங்காட்சியகம் மற்றும் ஒரு யூத ஆலயத்தை குண்டுவைத்து தாக்க திட்டமிட்டதாக சந்தேகிக்கப்படும் நபர் கைது!!

லூவர் அருங்காட்சியகம் மற்றும் ஒரு யூத ஆலயத்தை குண்டுவைத்து தாக்க திட்டமிட்டதாக சந்தேகிக்கப்படும் நபர் கைது!!

11 வைகாசி 2026 திங்கள் 22:35 | பார்வைகள் : 423


Paris நகரில் Dafer M. என்ற 26 வயதுடைய துனிசிய இளைஞர், லூவர் அருங்காட்சியகம் மற்றும் ஒரு யூத ஆலயத்தை தாக்க திட்டமிட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் Hauts-de-Seine பகுதியில் வசித்து வந்தார்.

பிரான்ஸ் உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பான DGSI அதிகாரிகள், அவரது நடவடிக்கைகள் குறித்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் கடந்த வார இறுதியில் அவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் தாக்குதலுக்கான திட்டங்களை மிகவும் தீவிரமாக முன்னெடுத்திருந்ததாக கூறப்படுகிறது.

விசாரணையாளர்கள் அவரது கைப்பேசி, கணினி மற்றும் சில பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். குண்டு தயாரிக்க தேவையான பொருட்களையும் அவர் சேகரிக்கத் தொடங்கியிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், தீவிர இஸ்லாமிய சிந்தனைகளை ஆதரிக்கும் சிலருடன் தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

அவருக்கு முன்பு குற்றப் பதிவு எதுவும் இல்லை. சட்டபூர்வ ஆவணங்கள் இல்லாத நிலையில் இருந்தாலும், அவர் வேலை செய்து குடும்பத்துடன் வாழ்ந்து வந்துள்ளார். ஆனால் Dafer M. அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார். “இவை உண்மையல்ல” என்று அவர் தெரிவித்துள்ளார். அவரது வழக்கறிஞரான Réda Ghilaci இந்த வழக்கு குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துள்ளார்.