புளோரிடாவின் எவர்கிளேட்ஸ் பகுதியில் பற்றியெரியும் காட்டுத்தீ
11 வைகாசி 2026 திங்கள் 14:34 | பார்வைகள் : 266
புளோரிடாவின் எவர்கிளேட்ஸ் பகுதியில் சுமார் 5,000 ஏக்கர் பரப்பளவிற்குப் பரவிய காட்டுத்தீயை அவசர மீட்புக் குழுவினர் அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பற்றியெரியும் காட்டுத்தீயால் சாலைகள் மூடப்பட்டுள்ளதுடன், குடியிருப்புகள் பல நெருப்புக்கு இலக்காகும் நிலை ஏற்பட்டுள்ளது.
மியாமி-டேட், பிரௌவர்ட் மாவட்டம் மற்றும் புளோரிடா வனத்துறையைச் சேர்ந்த தீயணைப்புக் குழுவினர் அனைவரும் சம்பவ இடத்தில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை இரவு நிலவரப்படி, தீ 20 சதவீதம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. மிராமர் அருகே ஏற்பட்ட தீ சுற்றுவட்டாரத்தில் வியாபிக்க, தீ எரிந்துகொண்டிருக்கும் போதே அதிகாரிகள் சாலைகளை மூடி, உள்ளூர் மக்களை அப்பகுதியிலிருந்து விலகி இருக்குமாறு கேட்டுக்கொண்டனர்.
ஆனால், காட்டுத்தீ காரணமாக சாலைகளை நெருங்க முடியாமல் போயுள்ளதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர். மட்டுமின்றி, தீயணைப்பு வீரர்கள் சம்பவயிடத்திற்கு வரும் முன்னரே, தங்கள் குடியிருப்புகளை பாதுகாக்க பலர் போராடியுள்ளனர்.
சாலைகள் நெருங்க முடியாத நிலையில் இருப்பதால், இனி வெளியேற முடியாதோ என்ற அச்சமும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில், ஃப்ளோரிடா கீஸிலிருந்து வெளியே செல்லும் ஒரு சாலைப் பகுதியில், 18 மைல் தூரத்திற்கு வாகனங்கள் காணப்படுகின்றன.
மியாமி-டேட் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் தெரிவிக்கையில், காட்டுத்தீ ஏற்பட்டு, அது மேற்கு நோக்கி வேகமாகப் பரவி, 150 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பை எரித்ததுடன், மேலும் விரிவடைந்து சில சாலைகளையும் முடக்கியது என குறிப்பிட்டுள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan