த.வெ.க. வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு - தலைமை தேர்தல் அதிகாரி பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
11 வைகாசி 2026 திங்கள் 06:36 | பார்வைகள் : 166
தமிழ்நாடு சட்டசபைக்கு கடந்த ஏப்ரல் 23-ந் தேதி தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் கடந்த 4-ந் தேதி எண்ணப்பட்டன. இதில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் பெயர் பட்டியலை தேர்தல் கமிஷன் வெளியிட்டது.
இந்த தேர்தலில் திருப்பத்தூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் பெரியகருப்பன் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். .இவரை எதிர்த்து போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சீனிவாச சேதுபதி ஒரு ஒட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அதாவது பெரிய கருப்பன் 83 ஆயிரத்து 364 வாக்குகளை பெற்று தோல்வி அடைந்தார். சீனிவாச சேதுபதி 83 ஆயிரத்து 365 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்..இதையடுத்து சீனிவாச சேதுபதி எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்க தடை விதிக்க வேண்டும் என்ற அவசர வழக்கை சென்னை ஐகோர்ட்டில் பெரியகருப்பன் தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு ஞாயிற்றுக்கிழமை நீதிபதி எஸ்.விக்டோரியா கவுரி, நீதிபதி என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. .அப்போது, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதிக்குட்பட்ட தபால் வாக்குகள் வேலூர் அருகே உள்ள திருப்பத்தூர் மாவட்டத்திற்கு மாறியதாக எழுந்த புகார் மீது பதிலளிக்காதது ஏன்? என தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள்,
இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய தலைமை தேர்தல் அதிகாரிக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan