கரும்பு ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரியுமா?
10 வைகாசி 2026 ஞாயிறு 15:34 | பார்வைகள் : 175
வெயில் காலம் வந்து விட்டாலே வெயிலில் அலைபவர்கள் எலுமிச்சை ஜூஸ், தர்பூசணி ஜூஸ், கரும்பு ஜூஸ் போன்றவற்றை அருந்துவார்கள். இதில் தர்பூசணி ஜூஸை ஒப்பிடும்போது எலுமிச்சை சாறும், கரும்புச் சாறும் குறைவான விலைகளில் கிடைக்கிறது. ஒரு டம்ளர் ரூ.10 முதல் 15 வரை கிடைக்கிறது. அதிலும் கரும்புச்சாறில், எலுமிச்சை சாறு மற்றும் இஞ்சியும் சேர்ந்து கொடுப்பதால் அதில் நிறைய நன்மைகள் இருக்கிறது. தற்போது தமிழகமெங்கும் வெயில் காலம் தொடங்கிவிட்ட நிலையில் எல்லா ஊர்களிலும் கரும்புச் சாறு விற்கப்படுகிறது.
கரும்புச்சாறு பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. கரும்புச்சாறில் உள்ள இயற்கையான சர்க்கரை உடலின் சோர்வை நீக்கி ஆற்றலை கொடுக்கிறது.. வெயிலில் உடலில் நீர்ச்சத்து வீணாகாமல் இருக்க சிறந்த பானமாக கரும்புச்சாறு இருக்கிறது. மஞ்சள் காமாலை மற்றும் கல்லீரல் போன்ற நோய்களை குணப்படுத்தவும், கல்லீரலை நச்சுத்தன்மையிலிருந்து பாதுகாக்கவும் கரும்புச்சாறு உதவுகிறது..
கரும்புச்சாறு செரிமான சுரப்பை மேம்படுத்துவதோடு, செரிமான கோளாறுகளை சரி செய்கிறது. கரும்பு சாறில் உள்ள பொட்டாசியம் சிறுநீரக செயல்பாட்டை உறுதி செய்து சிறுநீர் பாதை தொற்றில் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது..
கரும்பு சாறில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடன்டுகள் மற்றும் வைட்டமின் சி ஆகியவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சளி, இருமல் அண்டாமல் பார்த்துக் கொள்கிறது. அதோடு சருமத்தை இளமையாக வைக்கவும் உதவுகிறது. அதேநேரம் நீரிழிவு நோயாளிகள் கரும்பு சாற்றை மிதமான அளவில் எடுத்துக் கொள்வது நல்லது..
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan