Paristamil Navigation Paristamil advert login

பூண்டு சட்னி

பூண்டு சட்னி

10 வைகாசி 2026 ஞாயிறு 15:18 | பார்வைகள் : 163


சட்னியில் பல வகைகள் உள்ளன. அதில் எப்போதும் நோ சொல்லவே முடியாத சட்னி என்றால் அது பூண்டு சட்னிதான். இதை செய்வது மிகவும் சுலபம் என்பதால் பல பெண்களுக்கு இன்ஸ்டண்டாக கைக்கொடுப்பது இந்த பூண்டு சட்னிதான். இதை ஒரு வாரம் வரையில் கூட ஃபிரிட்ஜில் வைத்து சாப்பிடலாம். எனவே பல நேரங்களில் நமது வேலையும் மிச்சமாகிறது. இப்படி பலவகையில் உதவக்கூடிய பூண்டு சட்னியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
காய்ந்த சிவப்பு மிளகாய் – 10-12 (உங்கள் சுவைக்கு ஏற்ப)
பூண்டு – 10-12 பற்கள்
சீரகம் – 1 தேக்கரண்டி
உப்பு – சுவைக்கு ஏற்ப
கடுகு எண்ணெய் – 2-3 மேசைக்கரண்டி
தண்ணீர் – தேவைக்கு ஏற்ப

செய்முறை

மிளகாய்களை ஊறவைத்தல்: முதலில், காய்ந்த சிவப்பு மிளகாய்களைக் கழுவி, 20-30 நிமிடங்கள் வெதுவெதுப்பான நீரில் ஊறவைக்கவும். இது மிளகாய்களை மென்மையாக்கி, அரைக்கும்போது வழவழப்பான சட்னியை உருவாக்கும்.

. தயாரிப்பு: ஊறவைத்த மிளகாய்களில் இருந்து சிறிதளவு தண்ணீரை வடித்துவிடவும். மிளகாய், பூண்டு, சீரகம் மற்றும் உப்பை ஒரு மிக்சியில் சேர்க்கவும். தேவைக்கேற்ப, 1-2 தேக்கரண்டி ஊறவைத்த தண்ணீரைச் சேர்த்து, கெட்டியான விழுதாக அரைக்கவும்.

எண்ணெய் தாளிப்பு: ஒரு வாணலியில் சிறிதளவு கடுகு எண்ணெயைச் சூடாக்கவும். அரைத்த விழுதைச் சேர்த்து, அவ்வப்போது கிளறிக்கொண்டே, 2-3 நிமிடங்கள் குறைந்த தீயில் வதக்கவும். இது சட்னியின் பச்சை வாசனையை நீக்கி, அதன் நறுமணத்தை அதிகரிக்கும். பின் அடுப்பை அணைத்து பரிமாறலாம்.

நீங்கள் இந்த சட்னியை ஸ்டோர் செய்ய நினைத்தால் அதன் மேல் நல்லெண்ணெய் ஊற்றி காற்று புகாத டப்பாவில் அடைத்து ஃபிரிட்ஜில் வைக்கவும்.