கமல் ரஜினி படத்தில் திரிஷா?
10 வைகாசி 2026 ஞாயிறு 15:13 | பார்வைகள் : 168
ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் என இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஏற்கனவே இதன் புரோமோ வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தின் படப்பிடிப்பை ரஜினி தனது 173வது படத்தை முடித்த பிறகு தான் துவங்கவுள்ளார். இதற்கிடையில் கமலும், அன்பறிவு இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை திரிஷா உடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும், திரிஷாவிற்கு ரூ.12 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது என தகவல் பரவி வருகிறது. ஏற்கனவே கமல் உடன் திரிஷா இணைந்து 'மன்மதன் அம்பு, தூங்காவனம், தக் லைப்' ஆகிய படங்களில் நடித்து இருந்தார். அதேபோல் ரஜினியுடன் திரிஷா இணைந்து 'பேட்ட' படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan