Paristamil Navigation Paristamil advert login

சென்னை நேரு ஸ்டேடியத்தில் விஜய்; தமிழகத்தில் தவெக தலைமையில் புதிய அரசு!

சென்னை நேரு ஸ்டேடியத்தில் விஜய்; தமிழகத்தில் தவெக தலைமையில் புதிய அரசு!

10 வைகாசி 2026 ஞாயிறு 10:56 | பார்வைகள் : 494


சென்னை நேரு ஸ்டேடியத்திற்கு தமிழக முதல்வராக பதவியேற்று கொள்ள விஜய் வந்தார். அவரை கட்சியின் மூத்த நிர்வாகிகள், அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

சென்னை நேரு உள் விளையாட்டரங்கில், தமிழக முதல்வராக, இன்று காலை, 10:00 மணிக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பதவி ஏற்கிறார். தமிழகத்தில் ராஜாஜி முதல் ஸ்டாலின் வரை, இதுவரை, 12 முதல்வர்கள் இருந்துள்ளனர். நபர்கள் அடிப்படையில், 13வது முதல்வராக விஜய் பதவியேற்கிறார். இதற்கான அனைத்து ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

கருப்பு பேன்ட், வெள்ளை சட்டை

நீலாங்கரை இல்லத்தில் இருந்து விஜய் நேரு ஸ்டேடியத்திற்கு காரில் பலத்த பாதுகாப்புடன் புறப்பட்டார். வழிநெடுகிலும் விஜய்க்கு தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அவர்களை பார்த்து விஜய் காரில் இருந்த படியே கை அசைத்தார். தற்போது கருப்பு பேன்ட், வெள்ளை சட்டை அணிந்து, பதவியேற்பு விழாவுக்கு நேரு உள் விளையாட்டு அரங்கம் வந்தார் விஜய்; அவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

முதல்வராக பதவியேற்கவுள்ள தவெக தலைவர் விஜய்க்கு விசிக சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள் என திருமாவளவன் தெரிவித்தார்.

ராகுல் வருகை

பதவியேற்பு விழாவில் பங்கேற்க ராகுல் சென்னை வந்தார். அவரை காங்கிரஸ் கட்சியினர் விமான நிலையத்தில் வரவேற்றனர். அதுமட்டுமின்றி விஜய் பதவியேற்பு விழாவில் சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட முக்கிய தொழிலதிபர்கள் பங்கேற்கின்றனர்.

தற்போது இருந்தே நேரு ஸ்டேடியத்தில் தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பதை காண தமிழக வெற்றிக்கழத்தினர் குவிய துவங்கி உள்ளார். அவர்கள் டிவிகே...டிவிகே...டிவிகே என கோஷம் எழுப்பி வருகின்றனர். நிருபர்களிடம் தவெகவினர் கூறியதாவது: 'சி.ஜோசப் விஜய் எனும் நான்' என்ற அந்த ஒரு வார்த்தையை கேட்கத்தான் காத்திருக்கிறோம்.

விஜய் முதல்வராக நியமிக்கப்பட உள்ளார். எங்களுக்கு ரொம்ப சந்தோஷம், அளவற்ற சந்தோஷம். இங்கே நிற்பதற்கு எல்லாம் காரணம் விஜய் தான். கட்சிக்காக நாங்கள் வேலை செய்து இருக்கிறோம். நாங்கள் மக்கள் பணியை சிறப்பாக செய்ய போகிறோம், அதை நினைத்து ரொம்ப சந்தோஷம் அடைகிறோம். விஜய் மக்களுக்கு நல்லாட்சி தருவார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.