கடலில் அகதிகளை மீட்கும் பணியில் ஈடுபட்ட கப்பலில் இனவெறி பேச்சு!!
9 வைகாசி 2026 சனி 20:31 | பார்வைகள் : 2512
Ridens என்ற அகதிகளை மீட்கும் கப்பலில் பணிபுரிந்த சில மாலுமிகள் மீது இனவெறி குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக Parquet de Dunkerque ஆரம்ப கட்ட விசாரணையை தொடங்கியுள்ளது.
Le Monde வெளியிட்ட தகவலின்படி, கப்பல் கமாண்டரைச் சேர்த்து நான்கு குழு உறுப்பினர்கள் இனவெறி நடத்தை காரணமாக பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். கடலில் மீட்கப்பட்ட அகதிகளுக்கு எதிராக அவமதிப்பான மற்றும் வெறுப்புணர்வை தூண்டும் வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
Préfecture maritime தெரிவித்ததாவது, சில மாலுமிகள் தொடர்பாக குற்றவியல் தன்மை பெறக்கூடிய செயல்கள் மற்றும் கருத்துகள் குறித்து தகவல்கள் கிடைத்துள்ளன. தற்போது இந்த விவகாரம் நீதித்துறை விசாரணைக்குட்பட்டுள்ளது.
1976 ஆம் ஆண்டு கட்டப்பட்ட Ridens கப்பல், France அரசின் ஒப்பந்தத்தின் கீழ் கடலில் சிக்கியுள்ள அகதிகளை மீட்கும் பணியில் செயல்பட்டு வருகிறது. மீட்கப்பட்டவர்கள் பின்னர் அவசர உதவி சேவையினரிடம் ஒப்படைக்கப்படுகின்றனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan