தவெக ஆட்சிக்கு திருமா, முஸ்லிம் லீக் ஆதரவு; எண்ணிக்கை பலம் 120ஆக உயர்வு
9 வைகாசி 2026 சனி 14:24 | பார்வைகள் : 187
விஜய் கட்சி ஆட்சி அமைப்பதற்கான ஆதரவு கடிதத்தை விசிக தலைவர் திருமாவளவன் வழங்கினார். தொடர்ந்து, முஸ்லிம் லீக்கும் ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது. இதன்மூலம், தவெக ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 120 ஆக அதிகரித்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில், 108 இடங்களில் வென்று, தனிப் பெரும் கட்சியாக த.வெ.க., உருவெடுத்தது. கடந்த 6ம் தேதி, கவர்னர் ராஜேந்திர அர்லேக்கரை சந்தித்த விஜய், காங்கிரசின் ஐந்து எம்.எல்.ஏ.,க்களையும் சேர்த்து, 113 பேர் ஆதரவு இருப்பதாக கூறி, தன்னை ஆட்சி அமைக்க அழைக்கும்படி வேண்டுகோள் விடுத்தார். பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு இருப்பதற்கான ஆதாரத்தை கொடுத்தால் மட்டுமே, ஆட்சி அமைக்க அழைக்க முடியும் என கவர்னர் உறுதியாக கூறி விட்டார்.
பெரும்பான்மைக்கு தேவையான, 118 என்ற எண்ணிக்கையை அடைய, தலா இரண்டு எம்.எல்.ஏ.,க்களை கொண்டுள்ள வி.சி.க., மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவை பெறும் முயற்சியில் விஜய் இறங்கினார். இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் ஆதரவு அளிப்பதாக அறிவித்தனர். இதன் பிறகும் அவருக்கு 116 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு மட்டுமே இருந்தது.
முஸ்லிம் லீக் ஆதரவு தர மறுத்த நிலையில், மீதம் இருந்த விசிக ஆதரவு தராமல் இழுத்தடித்தது. கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோருடன் திருமாவளவன் தொடர் ஆலோசனை நடத்தி வந்தார். தவெகவை ஆதரிக்கும்படி கட்சியினர் வற்புறுத்தியபோதிலும், முடிவை அறிவிக்காமல் இருந்தார். அவருடன் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா தொடர்ந்து பேச்சு நடத்தி வந்தார்.இதன் பயனாக, இன்று (மே 9ம் தேதி) விஜய் ஆட்சி அமைப்பதற்கான ஆதரவு கடிதத்தை திருமாவளவன் வழங்கினார். அந்த கடிதத்தில் விஜய் ஆட்சி அமைக்க நிபந்தனையற்ற ஆதரவு தெரிவிப்பதாக, திருமா குறிப்பிட்டுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய ஆதவ் அர்ஜூனா, 'வெற்றி.. வெற்றி... வெற்றி.. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் என்னுடைய ஆசான் விசிக கட்சி தோழர்களுக்கு நன்றி. ஜனநாயகம் காக்கப்படும். மக்களின் ஆதரவுடன் தமிழகத்தின் முதல்வராக விஜய் உருவாவார்கள். நன்றி,' என தெரிவித்துள்ளார்.
விசிகவுக்கும், தவெகவுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் என்ன ஒப்புக்கொள்ளப்பட்டது, என்ன பதவிகள், என்ன துறை என்பது பற்றிய விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விசிகவைத் தொடர்ந்து, முஸ்லிம் லீக்கும் ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது. இதன்மூலம், தவெக ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 120 ஆக அதிகரித்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan