Paristamil Navigation Paristamil advert login

மேஜிக் நம்பர் 118ஐ எட்டியது தவெக; நாளை முதல்வராக பதவியேற்கிறார் விஜய்

மேஜிக் நம்பர் 118ஐ எட்டியது தவெக; நாளை முதல்வராக பதவியேற்கிறார் விஜய்

8 வைகாசி 2026 வெள்ளி 17:07 | பார்வைகள் : 156


 பெரும்பான்மைக்கு தேவையான எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு கிட்டியதை தொடர்ந்து, நாளை விஜய் முதல்வராக பதவியேற்கிறார்.

108 இடங்களை வென்று தனி பெரும் கட்சியாக இருக்கும் தவெக ஆட்சியமைக்க தொடர்ந்து முயற்சித்து வருகிறது. காங்கிரஸ் 5 எம்எல்ஏக்களின் ஆதரவை அளித்துள்ளது. ஆனாலும் பெரும்பான்மை இல்லாத சூழல் எழுந்தது. பெரும்பான்மைக்கான 118 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதம் இருந்தால் தான் ஆட்சி அமைக்க அழைக்க முடியும் என்று கவர்னர் அர்லேக்கர் தெரிவித்து இருந்தார்.

இதையடுத்து, இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுடன் தவெக பேச்சுவார்த்தை நடத்தியது. பல கட்ட முயற்சிகளுக்கு பின்னர், இரு இடதுசாரி கட்சிகளும் தங்கள் ஆதரவை தவெகவுக்கு வழங்க முடிவு எடுத்துள்ளனர். ஆதரவு கடிதமும் கொடுத்து விட்டனர்.  விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் இடதுசாரிகளை பின்பற்றி தவெக ஆதரவு முடிவை எடுத்துள்ளனர். இதனால் மேஜிக் எண் 118 என்ற இலக்கை விஜய் எட்டிப்பிடித்துள்ளார்.

இந் நிலையில், கவர்னர் அர்லேக்கரை 3வது முறையாக விஜய் நேரில் சென்று இன்று சந்தித்தார். இந்த சந்திப்பு மிகக்குறைந்த நேரமே நீடித்தது.

இந்த சந்திப்பின் போது தமக்கு ஆதரவு அளித்துள்ள மற்ற கட்சிகளின் கடிதங்களை, கவர்னர் அர்லேக்கரிடம் விஜய் வழங்கி ஆட்சியமைக்க உரிமை கோரினார். போதிய எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு இருப்பதால் நாளை காலை விஜய்க்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.