கதையின் நாயகன் ஆகும் ‛மாமன்' இயக்குனர்!
8 வைகாசி 2026 வெள்ளி 16:25 | பார்வைகள் : 1406
புருஸ்லீ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரசாந்த் பாண்டியராஜ். இந்தபடம் வரவேற்பை பெறவில்லை. பின்னர் விலங்கு வெப் தொடரின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். நடிகர் சூரியை வைத்து 'மாமன்' படத்தை இயக்கினார். அந்த படமும் நல்ல வரவேற்பு பெற்றது. ஜீ 5 ஓடிடி தளத்திற்காக புதிய வெப் தொடரில் நடித்து வருகிறார் என்கிற தகவல் கூறப்பட்டது.
தற்போது அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, விக்னேஷ் நடராஜன் இயக்கத்தில் பிரசாந்த் பாண்டியராஜ் கதையின் நாயகனாக 'வாரண்ட்' என்கிற வெப் தொடரில் நடித்துள்ளார் என அறிமுக போஸ்டருடன் அறிவித்துள்ளனர். இதற்கு சாம்.சி.எஸ் இசையமைக்கிறார். மேலும், இந்த வெப் தொடர் விலங்கு வெப் தொடர் கதைக்களம் நடந்த அதே காலகட்டத்தில் நடைபெறுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan