Paristamil Navigation Paristamil advert login

பன்னாட்டு கடற்படை கூட்டணியின் முன்னணி பொறுப்பு பிரான்சிடம்!

பன்னாட்டு கடற்படை கூட்டணியின் முன்னணி பொறுப்பு பிரான்சிடம்!

8 வைகாசி 2026 வெள்ளி 14:49 | பார்வைகள் : 212


மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் பதற்றத்தை முன்னிட்டு,ஹோர்முஸ் நீரிணையை பாதுகாக்க உருவாக்கப்பட்ட பன்னாட்டு கடற்படை கூட்டணியில்
பிரான்ஸ் “முன்னணி பொறுப்பை" ஏற்றுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Charles‑de‑Gaulle மூலம் பிரான்ஸ் முழுமையான தன்னிறைவு பெற்றுள்ளது”

“Charles‑de‑Gaulle விமானம் தாங்கிப் போர்க்கலம் மூலம், நிலைமையை மதிப்பிடுதல், தகவல் சேகரிப்பு, ஒருங்கிணைப்பு, கட்டுப்பாடு ஆகியவற்றில், பிரான்ஸ் தன்னிறைவு பெற்றுள்ளது.
அதனால் பல நாடுகளை எங்களின் சுற்றில் இணைக்க முடிகிறது.”

அதாவது, பிரான்ஸ்

நிலைமையை தனியாக மதிப்பிட முடியும்

கடற்படை நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க முடியும்

கூட்டணியை வழிநடத்தும் திறன் பெற்றுள்ளது

Charles‑de‑Gaulle, ஹோர்முஸ் நீரிணைக்கு அருகே செல்கிறது என, பிரான்ஸ் ஆயுதப் படைகள் அமைச்சகம் அறிவித்தது.

Charles‑de‑Gaulle விமானம் தாங்கிப் போர்க்கலம், சிவப்பு கடலின் தெற்கு பகுதி நோக்கி செல்கிறது. ஹோர்முஸ் நீரிணைக்கு மிக அருகில் நிலைநிறுத்தப்பட உள்ளது

இது கூட்டணியின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் பிரான்சின் பங்கினை மேலும் வலுப்படுத்துகிறது.

பிரான்ஸ் மற்றும் ஐக்கிய இராச்சியம்,  ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தை மீண்டும் நிலைநிறுத்த முயற்சி செய்து வருகின்றன

ஏனெனில் :

ஈரான் – அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான மோதல், பிப்ரவரி 28 முதல் இந்த முக்கிய கடல் வழியை பாதித்துள்ளது

இதனால் உலக பொருளாதாரம் அதிர்ச்சி அடைந்துள்ளது.