Paristamil Navigation Paristamil advert login

பரிஸ்- 25 வயது பெண் குளியலறையில் உயிரிழந்த நிலையில்..

பரிஸ்- 25 வயது பெண் குளியலறையில் உயிரிழந்த நிலையில்..

8 வைகாசி 2026 வெள்ளி 12:45 | பார்வைகள் : 236


பரிஸ் 7வது மாவட்டத்தில், 25 வயது பெண் ஒருவர் தனது குளியலறையில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். சந்தேக நபர், அவரது துணைவர், சம்பவத்திற்குப் பிறகு தப்பிச் சென்றுள்ளார் என்று காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் வியாழக்கிழமை மாலை 19.30 மணியளவில் நடந்தது. அயலவரின் எச்சரிக்கை அழைப்பில் காவல்துறையினர் அங்கு வந்திருந்தனர்

Buenos-Ayres தெருவில் வசிக்கும் அயலவர், பெண் ஒருவரின் கத்தல் சத்தம் கேட்டதாகக் கூறி காவல்துறையை அழைத்தார்

காவல்துறையினர் வந்தபோது ,

வீட்டின் உள்ளே யாருடனும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அனுமதி பெற்று கதவை உடைத்து உள்ளே சென்றனர்

உடை அணிந்த நிலையில், முகம் குளியல் தொட்டியின் நீரில் மூழ்கியிருந்த
25 வயது பெண்ணின் உடலம் கண்டெடுக்கப்பட்டது

காவல்துறை உடனடியாக அவரை நீரிலிருந்து வெளியே எடுத்து, முதலுதவி வழங்கினர்.

பின்னர் SAMU மருத்துவர்கள், இரவு 9.22 மணிக்கு பெண் உயிரிழந்ததாக அறிவித்தார்.

முதல் விசாரணைகளின்படி, சந்தேக நபர் கூரையின் வழியாக தப்பியிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்திற்குப் பொறுப்பானவர் எனக் கருதப்படும், பெண்ணின் துணைவர், திறந்திருந்த ஜன்னல் வழியாக, கட்டிடத்தின் கூரைகளில் ஏறி தப்பிச் சென்றுள்ளார்.

தொடர் விசாரணைகளும் தேடுதல் நடவடிக்கைகளும் தொடர்கின்றன