பாகிஸ்தானில் துப்பாக்கிச் சூடு - மதகுரு உயிரிழப்பு
8 வைகாசி 2026 வெள்ளி 10:25 | பார்வைகள் : 1521
பாகிஸ்தானில் இனந்தெரியாத நபர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தாக்குதலில் நாட்டின் முக்கிய மதகுருவான மௌலானா முகமது இத்ரீஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
செவ்வாய்க்கிழமை 5.5.2026 இலஃ இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பொலிஸார் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள சர்சத்தா மாவட்டத்தில் உட்மான்சாய் என்ற பகுதியில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
பொலிஸாரின் பாதுகாப்போடு குறித்த பகுதியில் பயணித்துக்கொண்டிருந்தபோது, வாகனமொன்றில் வந்த இனந்தெரியாத நபர்கள் சிலர் துப்பாக்கியால் சுட்டத்தில் மதகுரு உயிரிழந்ததோடு, இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளனர்.
இத்ரீஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இதுவரை எவரும் பொறுப்பேற்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan