Paristamil Navigation Paristamil advert login

வார இறுதி வானிலை அறிக்கை – வெயிலுக்கு பின் கனமழை எச்சரிக்கை !!

வார இறுதி வானிலை  அறிக்கை – வெயிலுக்கு பின் கனமழை எச்சரிக்கை !!

7 வைகாசி 2026 வியாழன் 15:44 | பார்வைகள் : 268


மே 8ம் திகதி முதல் நீண்ட வார இறுதியை முன்னிட்டு, வெள்ளி மற்றும் சனிக்கிழமைகள் வெளிப்புறச் செயல்பாடுகளுக்கு ஏற்ற காலநிலையாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாட்டின் பல பகுதிகளில் வானம் தெளிவாகவும், பருவத்திற்கேற்ற அல்லது அதைவிட சற்றே அதிகமான வெப்பநிலையும் பதிவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை காலை முழு நாட்டிலும் சூரிய ஒளி காணப்பட்டாலும், பிற்பகலுக்குப் பின்னர் மேற்கு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை உருவாகும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை காலை முதலே Bretagne உள்ளிட்ட வடமேற்கு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பின்னர் அந்த மழை Normandie, Pays de la Loire மற்றும் தென்மேற்கு பகுதிகளுக்கும் பரவக்கூடும். இரவு நேரத்தில் தெற்கு பிரான்ஸ் மற்றும் கொர்சிக்கா தீவு வரை மழை தாக்கம் காணப்படும் என்றும், அதேவேளை வெப்பநிலை 20 முதல் 23 செல்சியஸ் வரை உயர்ந்து பருவ சராசரியை விட சற்றே அதிகமாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில், ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் பரவலான மழை பெய்யும் வாய்ப்பு அதிகம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடமேற்கிலிருந்து தென்கிழக்கு வரை பல பகுதிகளில் மழை நீடிக்கும் நிலையில், சில இடங்களில் பலத்த சாரலும் பதிவாகலாம். இதனால் வெப்பநிலை சற்றுக் குறைந்து 18 முதல் 20 செல்சியஸ் வரை காணப்படும் என்றும், மேகமூட்டம் மற்றும் மழை காரணமாக குளிர்ச்சியான வானிலை நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.