சிக்ஸர் மழையில் 59 பந்துகளில் சதம்! ஐபிஎல்லில் புதிய சாதனை
7 வைகாசி 2026 வியாழன் 12:52 | பார்வைகள் : 1476
ஐபிஎல் கிரிக்கெட்டில் இளம் வயதில் சதம் விளாசிய வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை, பஞ்சாப் வீரர் கூப்பர் கொன்னொலி படைத்தார்.
ஐபிஎல் 2026 தொடரின் 07.05.2026 போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.
முதலில் ஆடிய சன்ரைசர்ஸ் அணி 235 ஓட்டங்கள் குவித்தது. ஹெய்ன் கிளாஸன் 69 ஓட்டங்களும், இஷான் கிஷன் 55 ஓட்டங்களும் விளாசினர்.
பின்னர் ஆடிய பஞ்சப் கிங்ஸ் அணி 202 ஓட்டங்கள் எடுத்து தோல்வியுற்றது. கூப்பர் கொன்னொலி 59 பந்துகளில் 107 ஓட்டங்கள் (8 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள்) விளாசினார்.
இதன்மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் இளம் வயதில் சதம் விளாசிய வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை படைத்தார். அவர் 22 வயதில் இந்த சாதனையைப் படைத்துள்ளார்.
இதற்கு முன்பு குயிண்டன் டி காக் 23 வயதில் சதம் அடித்ததே சாதனையாக இருந்தது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan