தமிழக அரசியலில் காட்சிகள் மாறின - நடந்தது என்ன?
7 வைகாசி 2026 வியாழன் 10:17 | பார்வைகள் : 201
தமிழகத்தில் நடந்து முடிந்த 17-வது சட்டசபை தேர்தலில், யாருக்கும் பெரும்பான்மை (118 தொகுதிகளில் வெற்றி) கிடைக்காததால், இன்னும் ஆட்சி அமைக்கப்போவது யார்? என்பது முடிவாகாமல் இருக்கிறது.
தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றிய த.வெ.க.வுக்கு, தி.மு.க.வுடன் கைகோர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்துள்ள போதும், பெரும்பான்மை இன்னும் கிடைக்கவில்லை. அதாவது, த.வெ.க. பெற்ற 108 தொகுதிகளுடன், காங்கிரஸ் கட்சி பெற்ற 5 இடங்களை சேர்த்தால், 113 தொகுதிகள் தான் வருகிறது. இன்னும் 7 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது.
இதுபோன்ற சூழ்நிலையில், தமிழ்நாட்டின் 12-வது முதல்-அமைச்சராக விஜய் பதவியேற்பாரா? என்று எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அதாவது, ஆட்சி மாறும் என்று அனைவரும் காத்திருந்த நிலையில், நேற்று ரஜினிகாந்த், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சென்று சந்தித்த பிறகு, தமிழக அரசியலில் காட்சிகள் மாறத் தொடங்கின. இந்த சந்திப்பின்போது, இக்கட்டான சூழ்நிலையிலும் உங்களுடன் இருப்பேன் என்று ரஜினிகாந்த், மு.க.ஸ்டாலினிடம் கூறியதாக தகவல்கள் பரவியது. இதற்கிடையே, த.வெ.க. ஆட்சியமைக்க காங்கிரஸ் நிபந்தனையுடன் ஆதரவு அளித்தது.
த.வெ.க. - காங்கிரஸ் கைகோர்த்தது, தி.மு.க. - அ.தி.மு.க.வுக்கு அதிர்ச்சி அளித்ததோ இல்லையோ, பா.ஜ.க.வுக்கு பேரதிர்ச்சியாக அமைந்தது. தமிழகத்தில் கடும் பின்னடைவை சந்தித்த காங்கிரஸ், மீண்டு எழுவதை பா.ஜ.க.வால் ஜீரணிக்க முடியவில்லை. உடனேயே, விஜய்யை பா.ஜ.க. தரப்பில் இருந்து தொடர்பு கொண்டு, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டாம். உங்களின் பெரும்பான்மை பலத்துக்கு அ.தி.மு.க. ஆதரவு தருவார்கள் என்று கூறியதாக தெரிகிறது. ஆனால், இதை விஜய் ஏற்றுக்கொள்ளவில்லையாம்.
அதன்பிறகே, மு.க.ஸ்டாலின் - ரஜினிகாந்த் சந்திப்பு நடந்திருக்கிறது. இந்த சந்திப்புக்கு இடையே ரஜினிகாந்த், டெல்லியில் உள்ள முக்கிய தலைவருடன் போனில் தொடர்பு கொண்டு பேசினாராம். அதன்பிறகு, அந்த முக்கிய தலைவர் மு.க.ஸ்டாலினிடமும் பேசினாராம். அதன்பிறகுதான், தமிழக அரசியலில் காட்சிகள் மாறத் தொடங்கி இருக்கின்றன. விஜய் கவர்னரை சந்தித்து ஆட்சியமைக்க அழைப்பு விடுக்க கோரியபோது, அதற்கு அவர் மறுத்துவிட்டார். முதலில், பெரும்பான்மையை நிரூபியுங்கள் என்று அவர் கூறிவிட்டதாக சொல்லப்பட்டது.
அதன்பிறகே, இன்று காலை நடைபெற இருந்த விஜய்யின் பதவியேற்பு விழா ஒத்திவைக்கப்பட்டது. விஜய்க்கு ஆதரவு தர முன்வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி, இரு கம்யூனிஸ்டு கட்சிகளை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தடுத்து நிறுத்திவிட்டார்.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு சென்னையிலேயே தங்கியிருக்க உத்தரவிட்டார்.
இதற்கிடையே, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் 17 அ.தி.மு.க. வெற்றி வேட்பாளர்கள் புதுச்சேரியில் உள்ள விடுதியில் தங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால், அ.தி.மு.க.விலும் பிளவு ஏற்பட்டுள்ளதாக பரபரப்பாக பேசப்படுகிறது. .சி.வி.சண்முகம் தலைமையில் அ.தி.மு.க. உறுப்பினர்கள், விஜய்க்கு ஆதரவு தெரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மொத்தத்தில், தமிழக அரசியல் நிகழ்வு நொடிக்கு நொடி மாறிக் கொண்டே இருக்கிறது. ஆட்சி அமைக்கப்போவது யார்? என்பது முடிவாகும் வரை நிலைமை இதுபோன்று பரபரப்பாகத்தான் இருக்கும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan