விஜய் விளக்கத்தில் கவர்னருக்கு திருப்தியில்லை; ஆட்சி அமைப்பதில் தொடரும் சிக்கல்
7 வைகாசி 2026 வியாழன் 10:10 | பார்வைகள் : 137
பெரும்பான்மையை எப்படி நிரூபிப்பீர்கள் என்ற கேள்விக்கு விஜய் அளித்த விளக்கத்தில் கவர்னருக்கு திருப்தியில்லை. இதனால், தவெக ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடிக்கிறது.
கவர்னர் அர்லேக்கரை சந்தித்து, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், ஆட்சி அமைக்க அழைக்குமாறு கடிதம் கொடுத்து இருந்தார். போதுமான எண்ணிக்கையில் எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவை பெற்று வருமாறு கவர்னர் அறிவுறுத்தியதை அடுத்து, தமிழக அரசியல் களம் சூடு பிடித்தது.
இந்நிலையில் விஜய்க்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது. பதவியேற்பு விழா ஏற்பாடுகள் நிறுத்தப்பட்டது. அதிமுக எம்எல்ஏக்கள் புதுச்சேரி ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சூழலில், ஆட்சி அமைப்பது தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்களை சந்திக்க கவர்னர் அழைப்பு விடுத்து இருந்தார். அழைப்பின் பேரில், இன்று காலை 11 மணிக்கு கவர்னர் மாளிகைக்கு தவெக தலைவர் விஜய் வந்தார். விஜய் இடம் கவர்னர் ஆட்சி அமைப்பது தொடர்பாக சில விளக்கங்களை கேட்டு உள்ளார்.
கவர்னர் திட்டவட்டம்
113 எம்எல்ஏக்களை வைத்து எப்படி ஆட்சி அமைப்பீர்கள்? வேறு எந்த கட்சி தவெக அரசை ஆதரிக்கும்? பதவி ஏற்ற பிறகு பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என்று எப்படி நம்புகிறீர்கள்? உங்களிடம் இருக்கும் எம்எல்ஏக்களை வைத்து நிலையான அரசை அமைக்க முடியுமா?
118 எம்எல்ஏக்கள் ஆதரவை இருப்பதை காட்டுங்கள், அவ்வாறு நிரூபித்தால் மட்டுமே பதவி பிரமாணம் செய்து வைக்க முடியும். பெரும்பான்மை கிடைத்துவிடும் எனும் யூகத்தின் அடிப்படையில் செயல்பட முடியுமா?' என்று விஜயிடம் தமிழக கவர்னர் அர்லேக்கர் கேள்விகளை எழுப்பினார். அப்போது அவரிடம், விதிமுறைகளின்படி தன்னை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று விஜய் மீண்டும் வலியுறுத்தினார்.
விஜய் கவர்னரை சந்திப்பது, 24 மணி நேரத்தில் இது இரண்டாம் முறை.
பெரும்பான்மையை எப்படி நிரூபிப்பீர்கள் என்ற கவர்னரின் கேள்விகளுக்கு விஜய் நேரடியாக பதில் அளிக்க முடியவில்லை. அவர் அளித்த விளக்கத்தில் கவர்னருக்கு திருப்தி இல்லை. இதனால், ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பது, பதவிப்பிரமாணம் செய்து வைப்பது பற்றி கவர்னர் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. இதனால் தவெக ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடிக்கிறது.
இபிஎஸ்க்கும் அழைப்பு
கவர்னர் அர்லேக்கர் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்சுக்கும் நேரில் சந்திக்க வருமாறு அழைப்பு விடுத்து இருக்கிறார். அதன்படி கவர்னரை சந்தித்து இபிஎஸ் பேச உள்ளார்.
அடுத்தபடியாக, முதல்வர் ஸ்டாலினுக்கும் கவர்னர் அழைப்பு விடுத்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan