விஜய் ஆட்சி அமைக்கட்டும்; 6 மாதம் தொந்தரவு செய்ய மாட்டோம் என்கிறார் ஸ்டாலின்
7 வைகாசி 2026 வியாழன் 12:42 | பார்வைகள் : 1619
விஜய் ஆட்சி அமைக்கட்டும். நாங்கள் 6 மாதம் எந்த தொந்தரவும் செய்ய மாட்டோம் என ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.
அவரது பேட்டி: விஜய் ஆட்சி அமைக்கட்டும். நாங்கள் 6 மாதம் எந்த தொந்தரவும் செய்யாமல் அவரது ஆட்சியை கவனிப்போம். அரசியல் சட்ட சிக்கல் ஏற்படுவதை திமுக விரும்பவில்லை. விரைவில் இன்னொரு தேர்தல் நடத்தப்படுவதையும் நாங்கள் விரும்பவில்லை. விஜய் கட்சி தாங்கள் அறிவித்துள்ள தேர்தல் அறிக்கையை நிறைவேற்றுவதுடன் திமுக அரசு செயல்படுத்திய திட்டங்களையும் தொடர வேண்டும்.
புதிய அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச காலை உணவுத் திட்டம், பெண்களுக்கு மகளிருக்கு உதவித்தொகை ரூ.ஆயிரம் வழங்குவதை தொடர வேண்டும். விஜய் பெண்களுக்கு ரூ.2,500 வழங்குவதாக கூறிய வாக்குறுதியை நிறைவேற்றுவது கடினம். நாங்கள் செய்தது போல குறைந்தபட்சம் பெண்களுக்கு ரூ.ஆயிரம் கொடுக்க வேண்டும். 2021ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் கட்சி அளித்த வாக்குறுதிகளில் 90 சதவீதத்தை தனது அரசு நிறைவேற்றியுள்ளது.
மத்திய அரசின் கட்டுப்பாடு காரணமாக நீட் தேர்வை நிறுத்துவது போன்ற சில வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை. இந்தத் தேர்தலிலும், எங்களால் நிறைவேற்ற முடிந்தவற்றை மட்டுமே நாங்கள் வாக்குறுதியாக அளித்தோம். தவெக ரேஷன் அட்டை வைத்திருக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு ஆறு இலவச காஸ் சிலிண்டர் வழங்குவோம் என்ற தனது வாக்குறுதியை நிறைவேற்றும் என்று நான் நினைக்கவில்லை. அவர்கள் செய்தால் நாங்கள் மகிழ்ச்சியடைவோம். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan