த.வெ.க.வுக்கு ஆதரவு: காங்கிரஸ் கட்சியின் மாஸ்டர் பிளான் இதுதான்!
6 வைகாசி 2026 புதன் 10:25 | பார்வைகள் : 181
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பே த.வெ.க.வுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. த.வெ.க. தலைவர் விஜயை, காங்கிரஸ் மூத்த நிர்வாகி பிரவீண் சக்கரவர்த்தி சந்தித்து பேசினார். .காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் விஜய்யுடன் போனில் பேசிய நிலையில், அக்கட்சிக்கு 70 தொகுதிகள் ஒதுக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
ஆனால், திடீரென டெல்லி காங்கிரஸ் தலைமை, தி.மு.க.வுடனான கூட்டணி தொடரும் என்று அறிவித்துவிட்டது. காங்கிரஸ் கட்சியின் இந்த திடீர் மனமாற்றத்திற்கு தமிழக காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய மந்திரி ஒருவரும் தான் என்று அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. தேர்தலுக்கு முன்பு த.வெ.க.வுடன் காங்கிரஸ் கூட்டணியில் இணையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தேர்தலுக்கு பின்பு இப்போது பெரும்பான்மையை நிரூபிக்க த.வெ.க.வுக்கு காங்கிரஸ் கைகொடுத்து இருக்கிறது. .த.வெ.க.வுக்கு காங்கிரஸ் திடீரென ஆதரவு கொடுக்க பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. தற்போது, நாடாளுமன்ற மக்களவையில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு தி.மு.க. பக்கபலமாக இருந்து வருகிறது. அதிக எண்ணிக்கையில் எம்.பி.க்களை வைத்திருப்பதால், அந்தக் கூட்டணியில் தி.மு.க. செல்வாக்குடன் திகழ்ந்து வந்தது. .அடுத்து, 2029-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.
அதற்குள், தமிழ்நாட்டில் தற்போது இழந்த மக்கள் செல்வாக்கை தி.மு.க. மீண்டும் பெற்றுவிடுமா? என்பது கேள்விக்குறிதான். காங்கிரஸ் கட்சியும் அதை உணர்ந்துதான், இப்போதே த.வெ.க. பக்கம் கைகோர்த்து இருக்கிறது. இடையில், உள்ளாட்சி தேர்தலும் வர இருப்பதால், அதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் காங்கிரஸ் கட்சி ஆபத்பாந்தவனாக த.வெ.க.வுக்கு கைகொடுத்துள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை வளர்க்க முடியும் என்றும் அக்கட்சி தலைமை நினைக்கிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan