Paristamil Navigation Paristamil advert login

அதிமுக எம்எல்ஏக்களுடன் இபிஎஸ் சந்திப்பு!

அதிமுக எம்எல்ஏக்களுடன் இபிஎஸ் சந்திப்பு!

6 வைகாசி 2026 புதன் 11:46 | பார்வைகள் : 619


அதிமுக எம்எல்ஏக்களை தன் இல்லத்துக்கு வரவழைத்து தனித்தனியாக சந்தித்து, அக்கட்சியின் பொதுச்செயலாளர் இபிஎஸ் ஆலோசனை நடத்தினார்.

தமிழக சட்டசபை தேர்தலில், தேஜ கூட்டணிக்கு தலைமை வகித்து, அதிமுக களமிறங்கியது. ஆனால், வெறும் 47 இடங்களில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றது; எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்து நிற்கிறது.

மறுபக்கம், 108 தொகுதிகளில் வெற்றி பெற்றபோதும், பெரும்பான்மை கிடைக்காததால், அதிமுகவில் இருந்து எம்எல்ஏக்களை துாக்க, தமிழக வெற்றிக் கழகத்தின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முயற்சி செய்து வருகிறார்.

தவெகவின் பேரத்துக்குள் சிக்காமல் இருக்கவும், அடுத்தக்கட்ட முடிவுகள் குறித்து ஆலோசிக்கவும், இபிஎஸ் முடிவெடுத்துள்ளார். அதன்படி, வெற்றி பெற்றுள்ள, 47 எம்எல்ஏக்களையும், சென்னை வர உத்தரவிட்டு இருந்தார்.

அதன்படி, முன்னாள் அமைச்சர் வேலுமணி உட்பட சென்னை வந்த எம்எல்ஏக்களை, தன் இல்லத்துக்கு வரவழைத்து, தனித்தனியாக சந்தித்து இபிஎஸ் பேசினார்.

இதுகுறித்து, அதிமுக எம்எல்ஏக்கள் சிலர் கூறுகையில், 'தேர்தல் தோல்வியின் வாட்டம் இபிஎஸ் முகத்தில் அப்பட்டமாக தெரிகிறது. ஆனாலும், அதை மறைத்து, இனிதான் நாம் சிறப்பாக செயல்பட வேண்டும். உங்களுக்கு என்ன தேவையோ என்னிடம் கேளுங்கள். அதை செய்ய தயாராக இருப்பதாக உறுதியளித்தார்' என்றனர்.