Paristamil Navigation Paristamil advert login

தமிழக தேர்தல் முடிவுகள் - வெற்றி விவரம்

தமிழக தேர்தல் முடிவுகள் - வெற்றி விவரம்

5 வைகாசி 2026 செவ்வாய் 17:00 | பார்வைகள் : 271


தமிழக தேர்தல் முடிவுகள் வெளியாகி தமிழக மக்களின் தீர்ப்புகளின் வெற்றி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

முதல் முறையாக தமிழக சட்டப்பேரவை தேர்தலில் களம் இறங்கிய தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களை கைப்பற்றி புதிய சாதனையை படைத்திருக்கிறது இதனைத் தொடர்ந்து அக்கட்சியின் தலைவரான விஜய் முதல்வராகிறார்.

தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளம், அசாம், புதுச்சேரி ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் கடந்த மே மாதத்தில் மூன்று கட்டங்களாக நடைபெற்று நிறைவடைந்தது. முதலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று ( மே 4 ஆம் திகதி) நடைபெற்றது.

தேர்தல் ஆணையத்தின் இறுதி முடிவுகளின் அடிப்படையில்,

தமிழக வெற்றி கழகம் - 108

திமுக கூட்டணி-  73

அதிமுக கூட்டணி-  53 இடங்களில் வென்று இருக்கிறது.

திமுக கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகள் வென்ற இடங்கள்

திமுக-  59

காங்கிரஸ் - 5

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் -2

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி -2

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - 2

விடுதலை சிறுத்தைகள் கட்சி -2

தேசிய முற்போக்கு திராவிட கழகம்-1

அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற கட்சிகள் வென்ற இடங்கள்..

அதிமுக -47

பாட்டாளி மக்கள் கட்சி -4

பாரதிய ஜனதா-1

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்-1

இந்தத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் 34.9 சதவீத வாக்குகளும், திமுக 24.1% வாக்குகளும் அதிமுக 21.2 சதவீத வாக்குகளும் பெற்றிருக்கிறது.

அதிமுக கூட்டணியில் இடம் பிடித்த பாஜக 2.9 சதவீத வாக்குகளும், திமுக கூட்டணியில் இடம் பிடித்த காங்கிரஸ் கட்சி 3.3‌ சதவீத வாக்குகளும் பெற்றிருக்கிறது.

கடந்த தேர்தலில் எட்டு சதவீதத்திற்கு மேற்பட்ட வாக்குகளை பெற்று மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை பெற்றிருந்த சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி- 234 தொகுதியிலும் தனித்து போட்டியிட்டு.. வைப்புத் தொகையை இழந்ததுடன் நான்கு சதவீத வாக்குகளை மட்டும் பெற்றிருக்கிறது.

இதனிடையே புரட்சித் தலைவர் எம்ஜிஆர் சட்டப்பேரவை தேர்தலில் தனித்து களம் இறங்கி வெற்றி பெற்று முதல்வராக பதவியேற்று படைத்த சாதனையை பல ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் 34.9 சதவீத வாக்குகளை பெற்று புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் சாதனையை மிஞ்சி.. புதிய சாதனையை படைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி