Paristamil Navigation Paristamil advert login

6 ரன்னில் முதல் சதத்தை தவறவிட்ட நேபாள வீரர்

6 ரன்னில் முதல் சதத்தை தவறவிட்ட நேபாள வீரர்

5 வைகாசி 2026 செவ்வாய் 14:03 | பார்வைகள் : 1406


ஓமன் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில், நேபாள வீரர் ஆரிஃப் ஷேய்க் 94 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

நேபாளம் மற்றும் ஓமன் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி கிர்ட்டிபூரில் நடந்து வருகிறது.  

நேபாள அணி முதலில் துடுப்பாட்டத்தைத் தொடங்கியது. பினோத் பந்தாரி முதல் பந்திலேயே டக்அவுட் ஆனார்.

பின்னர் அர்ஜுன் குமல், ஆரிஃப் ஷேய்க் இருவரும் கூட்டணி அமைத்தனர். அர்ஜுன் நிதானமாக ஆட, ஆரிஃப் ஷேய்க் (Aarif Sheikh) அதிரடி ஆட்டத்தில் மிரட்டினார்.

87 பந்துகளை எதிர்கொண்ட அர்ஜுன் குமல் (Arjun Kumal) 4 பவுண்டரிகளுடன் 48 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அடுத்து ரோஹித் பௌதல் 9 ஓட்டங்களில் வெளியேற, சதத்தை நோக்கி பயணித்த ஆரிஃப் ஷேய்க் 94 ஓட்டங்களில் (5 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள்) ஆட்டமிழந்தார்.