Paristamil Navigation Paristamil advert login

Poissy : மாணவன் தற்கொலை - துன்புறுத்தல் தொடர்பான விசாரணை

Poissy : மாணவன் தற்கொலை - துன்புறுத்தல் தொடர்பான விசாரணை

6 புரட்டாசி 2023 புதன் 17:34 | பார்வைகள் : 19818


15 வயதுடைய மாணவன் ஒருவன் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம்பெரும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.  இந்த தற்கொலை சம்பவம்தொடர்பில் நிர்வாக விசாரணைகள் இடம்பெறும் என கல்வி அமைச்சர் Gabriel Attal அறிவித்துள்ளார்.

நேற்று செவ்வாய்க்கிழமை இத்தற்கொலைச் சம்பவம் Poissy (Yvelines) நகரில்இடம்பெற்றிருந்தது. 15 வயதுடைய சிறுவன் ஒருவன் தனது வீட்டின் அறையில்தற்கொலை செய்துகொண்ட நிலையில், செவ்வாய்க்கிழமை காலை அவனதுபெற்றோர்களால் சடலம் மீட்கப்பட்டிருந்தது.

பாடசாலையில் இடம்பெற்ற துன்புறுத்தலினால் சிறுவன் தற்கொலைசெய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, பாடசாலையில் இடம்பெற்ற இந்த துன்புறுத்தல் தொடர்பானநிர்வாக விசாரணை ஆரம்பிக்கப்படுள்ளதாக கல்வி அமைச்சர் Gabriel Attal இன்றுபுதன்கிழமை தெரிவித்தார். 

வர்த்தக‌ விளம்பரங்கள்