Paristamil Navigation Paristamil advert login

மத்திய கிழக்கில் மீண்டும் பதற்ற நிலை-ஈரான் இராணுவம் எச்சரிக்கை

 மத்திய கிழக்கில் மீண்டும் பதற்ற நிலை-ஈரான் இராணுவம் எச்சரிக்கை

5 வைகாசி 2026 செவ்வாய் 08:57 | பார்வைகள் : 1970


மத்திய கிழக்கில் பதற்ற நிலை மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹோர்முஸ் நீரிணையை அணுகவோ அல்லது அதற்குள் நுழையவோ அமெரிக்கப் படைகள் முயற்சித்தால், அவற்றை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் இராணுவம் கடுமையாக எச்சரித்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணையில் சிக்கியுள்ள கப்பல்களைப் பாதுகாப்பாக வெளியே கொண்டு செல்லும் நோக்கில், “புராஜெக்ட் ஃப்ரீடம்” எனப்படும் கடற்படை நடவடிக்கையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அமெரிக்கத் தரப்பின் தகவலின்படி, குறித்த கடற்படை நடவடிக்கைகள் அடுத்த சில மணிநேரங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

போர்நிலையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான 14 அம்சங்களைக் கொண்ட தனது சமீபத்திய முன்மொழிவுக்கு வோஷிங்டனிலிருந்து கிடைத்த பதிலை ஆய்வு செய்து வருவதாக ஈரான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, தெஹ்ரான் முன்வைத்த இந்த முன்மொழிவை "ஏற்றுக்கொள்ள முடியாதது" என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.