ஆட்சி அமைக்க காங்., - பா.ம.க., - வி.சி., ஆதரவு பெற த.வெ.க., முயற்சி
5 வைகாசி 2026 செவ்வாய் 11:26 | பார்வைகள் : 414
சட்டசபை தேர்தல் முடிவில், த.வெ.க.,வுக்கு பெரும்பான்மை கிடைக்காததால், விஜய் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், த.வெ.க., 106 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், ஆட்சி அமைக்க, 118 எம்.எல்.ஏ.,கள் ஆதரவு வேண்டும். அதன்படி, த.வெ.க.,வுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காததால், ஆட்சி அமைக்க, வேறு கட்சிகளின் ஆதரவு தேவைப்படுகிறது.
இதுகுறித்து, த.வெ.க., மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: சட்டசபை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக, த.வெ.க., உருவெடுத்திருப்பது மிகப்பெரிய வெற்றி. ஆனால், ஆட்சி அமைக்க போதுமான பலம் கிடைக்கவில்லை. ஆரம்பத்தில் இருந்தே, த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்கவே காங்கிரஸ் முயற்சி செய்தது.
அதற்கு தடையாக இருந்த தமிழக காங்., தலைவர் செல்வபெருந்தகை, தோல்வி அடைந்து விட்டார். இந்நிலையில், விஜய்க்கு காங்கிரஸ் லோக்சபா தலைவர் ராகுல் போனில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்போதே, ஆட்சி அமைக்க உதவுமாறு, விஜய் கோரிக்கை வைத்தார். ஆனால், 'தேர்தல் முடிவுகள் முழுமையாக வரட்டும்' என, ராகுல் சொல்லி இருக்கிறார்.
ஒருவேளை காங்., ஆதரவு கிடைத்தாலும், த.வெ.க.,வுக்கு ஆட்சி அமைப்பதற்கான முழு பலம் கிடைக்காது. எனவே, ஐந்து தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ள பா.ம.க.,விடம் பேச்சு நடத்தப்படுகிறது. விஜயின் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி, பா.ம.க., தலைவர் அன்புமணியுடன் நெருக்கமாக உள்ளார்.
அதன்படி, அவரிடம் த.வெ.க.,வுக்கு ஆதரவு கொடுக்க, ஜான் கேட்டுள்ளார்; ஆனால், அன்புமணி இன்னும் தன் முடிவை அறிவிக்கவில்லை.
ஒருவேளை இவ்விரு கட்சிகளில் ஏதேனும் ஒருகட்சி வரவில்லை என்றால், கூடுதலாக கட்சிகளுடன் பேச்சு நடத்த வேண்டி உள்ளது. அதன்படிதான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி., வெங்கடேசன் வாயிலாக, அக்கட்சியுடனும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடனும் பேச்சு நடத்தப்படுகிறது.
அதேபோல், தி.மு.க., கூட்டணியில் தனி சின்னத்தில் போட்டியிட்டுள்ள, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் பேச்சு நடக்கிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியிடமும் த.வெ.க., சார்பில் பேச்சு நடத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஆதரவு கோரும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன், சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி., கிராண்ட் சோழா ஹோட்டலில், ஜான் ஆரோக்கியசாமி தலைமையில் ஆட்சி அமைப்பதற்கான தீவிர ஆலோசனைகள் நடந்து வருகின்றன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan