யாழில் மதுபோதையில் தகராறு - நண்பனை போத்தலால் தாக்கி கொலை செய்தவர் கைது
4 வைகாசி 2026 திங்கள் 13:42 | பார்வைகள் : 1870
யாழ். பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருநகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (03) ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த தாக்குதலில் காயமடைந்த நபர், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் குருநகர் பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் தனது நண்பர் ஒருவருடன் மது அருந்திக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட தகராறு காரணமாக, சந்தேகநபர் மதுபான போத்தலால் தாக்கியதில் இந்த சம்பவம் நேர்ந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
42 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், யாழ். பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan