ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க வேண்டும் - எமானுவல் மக்ரோன்!
4 வைகாசி 2026 திங்கள் 12:44 | பார்வைகள் : 162
பிரான்ஸ் ஜனாதிபதி எமானுவல் மக்ரோன், ஈரான் மற்றும் அமெரிக்கா இணைந்து ஹோர்முஸ் நீரிணையை “ஒத்துழைப்புடன்” மீண்டும் திறக்க வேண்டும் என்று திங்கட்கிழமை அழைப்பு விடுத்தார்.
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்த புதிய நடவடிக்கையின் சட்டப்பூர்வ வடிவம் தெளிவாக இல்லை என அவர் குறிப்பிட்டார்.
«இந்த முயற்சி என்ன என்பதை எனக்கு தெரியவில்லை.»
ஆர்மேனியாவில் நடைபெற்ற ஐரோப்பிய அரசியல் சமூகத்தின் 8வது உச்சி மாநாட்டிற்கு வருகை தந்தபோது இதனை மக்ரோன் தெரவித்திருந்தார்.
"நிலையான தீர்வு இரான்–அமெரிக்க ஒத்துழைப்பே”
«நீரிணையை நீண்டகாலத்திற்கு திறக்க ஒரே வழி — இரான் மற்றும் அமெரிக்கா இணைந்து செயல்படுவது»
«இது மட்டுமே சுதந்திரமான, தடையற்ற, கட்டணமில்லாத கடற்பயணத்தை உறுதி செய்யும்»
என மக்ரோன் வலியுறுத்தினார்.
மேலும்,
பிரான்ஸ்–இங்கிலாந்து இணைந்து தொடங்கிய பாதுகாப்பு முயற்சி. அமெரிக்கா–ஈரான் மோதல் தொடரும் வரை செயல்படுத்தப்படாது
«அமெரிக்கா ஹோர்முஸை திறக்கத் தயாராக இருந்தால் அது நல்லது. ஆனால் தெளிவில்லாத எந்த வலுவான நடவடிக்கையிலும் நாங்கள் பங்கேற்க மாட்டோம்.»
எனவும் தெரிவித்தார்.
பிரான்ஸ்–இங்கிலாந்து முயற்சி : 50 நாடுகள் இணைந்த திட்டம்
மக்ரோன் மற்றும் பிரித்தானிய பிரதமர் கியர் ஸ்டார்மர் இணைந்து தொடங்கிய இந்த முயற்சியில்,
50 நாடுகள் பங்கேற்கின்றன.
லண்டனில் இராணுவ திட்டமிடல் தொடங்கியுள்ளது
இந்த பணி நடுநிலை, போரில் ஈடுபட்டவர்களிலிருந்து தனித்தது என வலியுறுத்தப்படுகிறது
வளைகுடாவில் நிலைமை சீராகிய பின் வர்த்தக கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்குவதே இதன் நோக்கம்
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan