அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு - 12 பேர் காயம்
4 வைகாசி 2026 திங்கள் 12:35 | பார்வைகள் : 143
அமெரிக்காவின் ஓக்லஹோமா மாகாணத்தில் எட்மண்ட் நகருக்கு அருகே உள்ள ஆர்காடியா ஏரிப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு இளைஞர்கள் குழுவாகக் கூடியிருந்தபோது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பில் எட்மண்ட் நகர பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எமிலி வார்ட் ஊடகவியலாளர்களிடம்,
"ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 9 மணியளவில் ஆர்காடியா ஏரிப் பகுதியில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திலிருந்து 10 பேர் அவசர சிகிச்சை வாகனங்கள் மூலம் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஏனையவர்கள் தாங்களாகவே வாகனங்களில் வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சையில் சேர்ந்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தில் காயமடைந்த 09 பேர் ஓக்லஹோமா சிட்டியிலும், 03 பேர் எட்மண்ட் வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களின் உடல்நிலை குறித்த விவரங்கள் இன்னும் முழுமையாக வெளியிடப்படவில்லை.
காயமடைந்தவர்கள் பல்வேறு நிலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும், வைத்தியசாலைகளுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை மாறக்கூடும் எனவும் பொலிஸ் அதன் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர்களைப் பிடிக்கப் பொலிஸார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். "இது மிகவும் அச்சமூட்டும் ஒரு சூழல். பொதுமக்களின் கவலையை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது.
குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க நாங்கள் கடுமையாகப் பணியாற்றி வருகிறோம். தற்போது வரை எவரும் கைது செய்யப்படவில்லை என எமிலி வார்ட் தெரிவித்துள்ளார்.
ஓக்லஹோமா சிட்டியின் வடக்கே அமைந்துள்ள இந்த ஏரி, மீன்பிடித்தல், படகு சவாரி மற்றும் முகாமிடுவதற்குப் பிரபலமான இடமாகும்.
சுமார் ஒரு இலட்சம் மக்கள் வசிக்கும் எட்மண்ட் நகரின் முக்கிய பொழுதுபோக்கு இடமாக இது திகழ்கிறது.
கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு, இதே எட்மண்ட் நகரில் உள்ள தபால் நிலையத்தில் ஒரு ஊழியர் தனது சக ஊழியர்கள் 14 பேரைக் சுட்டுக் கொன்ற சம்பவம் அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான பணியிடத் தாக்குதல்களில் ஒன்றாகக் கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan