Paristamil Navigation Paristamil advert login

2027 ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர்கள் - முழுமையான நீண்ட பட்டியல்!

2027 ஜனாதிபதி தேர்தலுக்கான  வேட்பாளர்கள் - முழுமையான நீண்ட பட்டியல்!

4 வைகாசி 2026 திங்கள் 12:04 | பார்வைகள் : 202


எமானுவல் மக்ரோனின் பதவிக்காலம் முடிவடைய இன்னும் ஒரு வருடமே உள்ள நிலையில், பல அரசியல் தலைவர்கள் 2027 ஜனாதிபதி தேர்தலுக்கு தங்கள் வேட்புமனுவை அறிவித்துள்ளனர்.

Marine Le Pen‑இன் சாத்தியமான தகுதி நீக்கம் (ஜூலை 2026 தீர்ப்பு எதிர்பார்ப்பு) அரசியல் சூழலை அதிகமாக பாதித்தாலும், பலர் ஏற்கனவே போட்டியில் உள்ளனர்.

1. Bruno Retailleau (65) — Les Républicains

LR உறுப்பினர்களின் வாக்கில் 73.8% ஆதரவுடன் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்.
உள்கட்சி முதன்மை நடத்தும் யோசனை நிராகரிக்கப்பட்டது.
சுமார் 46,000 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

2. Édouard Philippe (55) — Horizons

முன்னாள் பிரதமர், தற்போதைய Le Havre நகர முதல்வர்.
2025 செப்டம்பரில் தனது வேட்புமனுவை அறிவித்தார்.
வலது‑மத்திய உட்கட்சி முதன்மைச் சுற்றில் பங்கேற்க மறுப்பு.

தனது கட்சியின் பெயரில் தனித்துப் போட்டியிடுகிறார்.

3. David Lisnard (57) — Nouvelle Énergie

Cannes நகர முதல்வர், AMF தலைவர்.
2027 போட்டியில் பங்கேற்க விருப்பம் தெரிவித்தார்.
வலதுசாரி முதன்மைக்கு தயாராக இருப்பதாக கூறினார்.
Retailleau உட்கட்சி முதன்மை தெரிவுச் சுற்றை மறுத்ததால், LR‑ஐ விட்டு வெளியேறினார்.

4. Xavier Bertrand (61)

பல முறை முயன்றும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாதவர்.
2024 பிப்ரவரியில் 2027 வேட்புமனுவை அறிவித்தார்.
மக்ரோனிசத்துக்கும் மரின் லூப்பனிற்கும் மாற்றாக தன்னை நிலைநிறுத்த விரும்புகிறார்.

5. François Ruffin (50)

இடதுசாரி வேட்பாளர்; LFI‑யிலிருந்து பிரிந்தவர்.
2027‑இல் போட்டியிடத் தயாராக இருப்பதாக Montreuil கூட்டத்தில் அறிவித்தார்.
இடதுசாரியை «மீண்டும் கட்டமைக்க» முயற்சி.

6. Nicolas Dupont‑Aignan (65) — Debout la France

மூன்று முறை போட்டியிட்டவர்,நான்காவது முறையாக 2025 மார்ச் மாதத்தில் அறிவித்தார்.
«சுயாட்சி சார்ந்த» வாக்காளர்களை ஒன்றிணைக்க விரும்புகிறார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தற்போதைய செயல்பாட்டுக்கு கடுமையான எதிர்ப்பு.

7. François Asselineau (68) — UPR2017 வேட்பாளர் (0.92%).

2022‑இல் 500 ஆதரவு கையொப்பங்கள் கிடைக்காததால் போட்டியிட முடியவில்லை.
EU மற்றும் NATO‑விலிருந்து வெளியேற வேண்டும் என வலியுறுத்துபவர்.
2020‑இல் தொடங்கிய பாலியல் தொல்லை வழக்கில் 2024  வழக்கு மேல்முறையீட்டில் உள்ளது.

8. Marine Le Pen (57) — RN

2017 மற்றும் 2022 இறுதி சுற்று வேட்பாளர்.
RN‑இன் «இயல்பான வேட்பாளர்».
ஆனால் 2025 மார்ச் தீர்ப்பின் காரணமாக தகுதி நீக்க அபாயத்தில்.
மேல்முறையீடு செய்துள்ளார் -  தீர்ப்பு ஜூலை 2026.
தகுதி நீக்கம் உறுதியாகின், ஜோர்தான் பார்தெல்லா மாற்று வேட்பாளராக வரலாம்.

9. Jean‑Luc Mélenchon (74) — LFI

2025 மே 3 அன்று தனது நான்காவது வேட்புமனுவை அறிவித்தார்.
LFI‑யில் «அதிக அனுபவமுள்ளவர்» என தன்னை முன்வைக்கிறார்.
2022‑இல் இரண்டாம் சுற்றை 420,000 வாக்குகள் வித்தியாசத்தில் தவறவிட்டார்.

10. Clémentine Autain (52)

முன்னாள் LFI உறுப்பினர்; 2025 ஜூனில் வேட்புமனுவை அறிவித்தார்.
ஒக்டோபரில் நடைபெறும் இடதுசாரி உட்கட்சி முதன்மை தெரிவுச் சுற்றில் பங்கேற்கத் தயாராக உள்ளார்.

11. Jérôme Guedj (54) — Parti Socialiste

2026 பிப்ரவரியில் வேட்புமனுவை அறிவித்தார்.
இடதுசாரி உட்கட்சி முதன்மை தெரிவுச் சுற்றை "ஒழுங்கற்றது" எனக் கூறி பங்கேற்க மறுத்தார்.

குடியரசு, மதச்சார்பின்மை, ஐரோப்பிய மதிப்புகள் ஆகியவற்றை முன்னிறுத்த விரும்புகிறார்.

12. Raphaël Glucksmann (46) — Place Publique

இடதுசாரி ஒருங்கிணைந்த பிரைமரியில் பங்கேற்க மறுப்பு.
LFI‑யுடன் எந்த கூட்டணியும் வேண்டாம் எனத் தெளிவாக கூறுகிறார்.
2026 நகராட்சி தேர்தல்களில் PS‑LFI கூட்டணிகளை விமர்சித்தார்.

13. Bernard Cazeneuve (62) — La Convention

முன்னாள் பிரதமர்; 2026 ஏப்ரலில் வேட்புமனுவை அறிவித்தார்.
LFI‑க்கு எதிர்ப்பு காரணமாக 2022‑இல் PS‑ஐ விட்டு வெளியேறினார்.