மிக ஆபத்தான இராணுவ நிலம்- ரேவ்‑பார்டி!
4 வைகாசி 2026 திங்கள் 11:31 | பார்வைகள் : 1736
Bourges அருகே உள்ள மிகவும் ஆபத்தான இராணுவ நிலத்தில் இந்த சனிக்கிழமை 20,000‑க்கும் மேற்பட்டோர் சட்டவிரோத ஒன்றுகூடல்களும் இசைக் களியாட்டமுமான ரேவ்‑பார்டியில் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்வு, அறிவிக்கப்படாத அல்லது தடைசெய்யப்பட்ட ரேவ்‑பார்டிகளை கடுமையாக தண்டிக்கும் சட்ட முன்மொழிவுக்கு எதிரான போராட்டமாகவும் அமைந்துள்ளது.
சட்டவிரோத கூடுகை — வெடிக்காத குண்டுகள் உள்ள ஆபத்தான நிலம்
வெள்ளிக்கிழமை காலை முதல், ஆயிரக்கணக்கானோர் Bourges அருகே உள்ள Polygone எனப்படும் இராணுவ துப்பாக்கி சோதனைப் பகுதியில் கூடினர். இந்த நிலம் வெடிக்காத குண்டுகள் இருக்கக்கூடியதால் மிக ஆபத்தானது.
மே 1 வெள்ளி காலை 9 மணிக்கு: 2,300 மகிழுந்துகள் + 8,000 பேர் இருந்தனர்
மே 2 சனி காலை 8 மணிக்கு: 20,000 பேர் இன்னும் அங்கு இருந்தனர்.
ஏற்பாட்டாளர்கள்: 30,000 பேர் வருவார்கள் என முன்பே அறிவித்திருந்தனர்
ஆட்சியகம் தீ, வெடிப்பு போன்ற அபாயங்களுக்கு அவசர ஒருங்கிணைப்பு மையம் ஒன்றைத் திறந்துள்ளது.
Cher மாகாண ஆட்சியர் அறிவிப்பின் படி,
“இதைவிட மோசமான இடம் தேர்வு செய்ய முடியாது”
ரேவ்‑பார்டி வெள்ளி அதிகாலை 5 மணிக்கு Cornusse பகுதியில் தொடங்கியது.
«இது மிக ஆபத்தான நிலம்; வெடிக்காத குண்டுகள் இருக்கலாம்»
«தீ ஏற்றாதீர்கள், தோண்டாதீர்கள், தரையில் எதையும் எடுக்காதீர்கள்»
இதுவரை:
12 பேர் அவசர சிகிச்சை பெற்றனர்
4 பேர் காவலில் வைக்கப்பட்டனர்
சுமார் 30 அபராதங்கள் வழங்கப்பட்டன
பகுதியில்:
600 ஜோந்தார்மினர்
30 மீட்புக்குழுவினர்
45 தீயணைப்பு வீரர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
RD 976 சாலை Bourges – Nérondes இடையே இரு திசைகளிலும் மூடப்பட்டுள்ளது.
இன்னமும் அந்தப் பகுதியும், அந்தப் பகுதி விவசாயிகளும் பதற்றமான நிலையிலே உள்ளனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan