Paristamil Navigation Paristamil advert login

ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு

ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு

4 வைகாசி 2026 திங்கள் 08:05 | பார்வைகள் : 162


ஹோர்முஸ் நீரிணையில் தடுக்கப்பட்டுள்ள கப்பல்களை விடுவிப்பது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார்.

இதன்படி, இன்று காலை முதல் ஹோர்முஸ் நீரிணையில் தடுக்கப்பட்டுள்ள கப்பல்கள் மற்றும் அவற்றின் பணியாளர்களைப் பாதுகாப்பாக விடுவிக்க அமெரிக்கா தனது சிறந்த முயற்சிகளை மேற்கொள்ளும் என ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

பல கப்பல்களில் உணவுப் பொருட்கள் குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் அறிவித்துள்ளார்.

ஈரானுடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள், அனைத்து தரப்புக்கும் சாதகமாக அமையலாம் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் இன்று திங்கட்கிழமை மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகளில் எவரேனும் இடையூறு செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் கடந்த சில வாரங்களாக நிலவும் பதற்றம் காரணமாகப் பல சரக்குக் கப்பல்கள் தடுக்கப்பட்டுள்ளன

இந்தநிலையில் இன்றைய நடவடிக்கை அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் கூட்டு முயற்சியாக மனிதாபிமான அடிப்படையில் மேற்கொள்ளப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.