த.வெ.க. உத்தரவால் பிற கட்சியினர் அதிர்ச்சி!
4 வைகாசி 2026 திங்கள் 11:49 | பார்வைகள் : 1084
சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகும் நிலையில், மாற்றுக்கட்சிகளை சேர்ந்தவர்களுக்கு வலைவிரிக்குமாறு, கட்சியினருக்கு த.வெ.க. அறிவுறுத்தியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
இன்று வெளியாகும் தேர்தல் முடிவுகளில், த.வெ.க. பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலில் கிடைக்கும் செல்வாக்கை தக்க வைத்துக் கொள்ளும் பணியில், த.வெ.க. இப்போதே இறங்கிவிட்டது. இதற்காக வேட்பாளர்களை சென்னை பனையூர் அழைத்து, விஜய் பல ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
இது குறித்து அக்கட்சியினர் சிலர் கூறியதாவது:
த.வெ.க. வேட்பாளர்கள் பலர் தி.மு.க., அ.தி.மு.க.விடம் விலை போனதை விஜய் விரும்பவில்லை. தேர்தலில் த.வெ.க. தாக்கத்தை ஏற்படுத்தினாலும் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.,வை எதிர்த்து அரசியல் செய்வது எளிதல்ல.
தேர்தலில் கிடைக்கும் எழுச்சியை தக்க வைக்கும் விதமாக, மாற்றுக்கட்சிகளில் அதிருப்தியாக உள்ள நிர்வாகிகளிடம் பேசி, அவர்களை த.வெ.க.வில் இணைக்குமாறு விஜய் கட்டளையிட்டுள்ளார்.
கோவையில் உள்ள 5 மாவட்ட செயலர்களுக்கு இதற்கான அஸைன்மென்ட் வழங்கப்பட்டுள்ளது. தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ., காங்., உள்ளிட்ட கட்சிகளில் சீட் கிடைக்காதவர்கள், சீனியர்களால் ஓரங்கட்டப்பட்டவர்கள், அதிருப்தியாளர்களை த.வெ.க.வுக்கு வரவழைக்க வேண்டும்.
அவர்களுக்கு முக்கிய பொறுப்புகளும் தரவேண்டும் என விஜய் கூறியுள்ளார். முதல்கட்டமாக கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட தி.மு.க. நிர்வாகிகள் சிலர் எங்கள் கட்சியில் இணையவுள்ளனர். தேர்தல் முடிந்ததும் இன்னும் சில முக்கிய புள்ளிகளும் இணைவார்கள். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
ஏற்னவே திக்...திக்...மனநிலையில் உள்ள திராவிட கட்சியினர், த.வெ.க.வின் இந்த வலை விரிப்பு திட்டத்தை அறிந்து, தங்களுக்குள் ஆழமாக விவாதிக்கத்துவங்கியுள்ளனர். எந்த கட்சியை சேர்ந்தவர்கள், எத்தனை பேர், எந்த பக்கம் சாய்வார்கள் என்பது இன்று தெரிந்து விடும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan