Paristamil Navigation Paristamil advert login

கிளிநொச்சியில் விவகாரத்து கோரிய மனைவி - கோபத்தில் கணவன் செய்த செயல்

கிளிநொச்சியில் விவகாரத்து கோரிய மனைவி - கோபத்தில் கணவன் செய்த செயல்

3 வைகாசி 2026 ஞாயிறு 17:52 | பார்வைகள் : 739


கிளிநொச்சி செல்வாநகர் பகுதியைச் சேர்ந்த மூன்று பெண் பிள்ளைகளின் தாயான பெண் ஒருவர் தனது கணவரிடமிருந்து விவாகரத்து கோரி நீதி மன்றில் வழக்கு தாக்கல் செய்து வழக்கு நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் தனது மனைவி மீதான கோபத்தால் அவரது வீட்டில் உள்ள தென்னை மரங்களை கணவன் வெட்டி வீழ்த்தியுள்ளார்.

குறித்த இச்சம்பவம் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக மனைவி கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இரவு வேளையில் திருட்டுத்தனமாக காணிக்குள் வந்த கணவன் மரம் வெட்டும் இயந்திரம் மூலம் தென்னைகளை வெட்டி வீழ்த்தியுள்ளார்.

இது குறித்து மனைவி மேலும் தெரிவிக்கையில்,

காய்க்கும் நிலையில் தனக்கு வீட்டுத் தேவைகளை பூர்த்தி செய்து வந்த தென்னைகளையே வெட்டி வீழ்த்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஒரு சில தென்னைகளை வெட்டி வீழ்த்தியதோடு மேலும் ஒரு தென்னை வெட்டப்பட்டு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அதுவும் சற்று பலமான காற்று வீசும் போது வீழ்ந்துவிடும் எனவும் கவலை தெரிவித்துள்ளார்.