Paristamil Navigation Paristamil advert login

ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்த சுனில் நரைன்

ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்த சுனில் நரைன்

3 வைகாசி 2026 ஞாயிறு 17:28 | பார்வைகள் : 458


ஐபிஎல் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை சுனில் நரைன் படைத்துள்ளார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் 165 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.

டிராவிஸ் ஹெட் 28 பந்துகளில் 61 ஓட்டங்களும், இஷன் கிஷண் 29 பந்துகளில் 42 ஓட்டங்களும் விளாசினர்.

வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டுகளும், கார்த்திக் தியாகி மற்றும் சுனில் நரைன் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

சுனில் நரைன் இப்போட்டியில் 2 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் 200 விக்கெட்டுகள் மைல்கல்லினை கடந்தார்.

இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் 200 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வெளிநாட்டு வீரர் என்ற சாதனையைப் படைத்தார். ஒட்டுமொத்தமாக 200 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது வீரர் சுனில் நரைன் ஆவார்.

முன்னதாக சஹால், புவனேஷ்வர்குமார் 200 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தனர். 197 போட்டிகளில் நரைன் 201 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரது சிறந்த பந்துவீச்சு 5/19 ஆகும்.