மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஆயுதங்கள் வழங்க அமெரிக்கா அவரச ஒப்புதல்
3 வைகாசி 2026 ஞாயிறு 12:42 | பார்வைகள் : 1934
ஈரானுக்கு எதிரான போருக்கு மத்தியில், அமெரிக்க அரசு மத்திய கிழக்கு கூட்டாளிகளுக்கு 8.6 பில்லியன் டொலர் மதிப்பிலான ஆயுதங்களை விற்பனை செய்ய அனுமதி அளித்துள்ளது.
அவசர சூழ்நிலை காரணமாக காங்கிரசின் ஒப்புதலை தவிர்த்துவிட்டு, நேரடியாக இந்த ஆயுத ஒப்பந்தங்களை விரைவுபடுத்தியுள்ளதாக அமெரிக்க வெளிவிவகார செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலுக்கு 992 மில்லியன் டொலர் மதிப்பிலான APKWS (Advanced Precision Kill Weapon System) மற்றும் தொடர்புடைய உபகரணங்கள் வழங்கப்படவுள்ளன.
குவைத் நாட்டிற்கு 2.5 பில்லியன் டொலர் மதிப்பிலான Battle Command Systems வழங்கப்படவுள்ளன.
கத்தாருக்கு 5 பில்லியன் டொலர் மதிப்பில் Patriot ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள் மீண்டும் நிரப்பப்படவுள்ளன.
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு (UAE) 148 மில்லியன் டொலர் மதிப்பிலான APKWS ஆயுத அமைப்பு வழங்கப்படவுள்ளன.
Patriot ஏவுகணை அமைப்புகள் எதிரி ஏவுகணைகளை தடுக்க பயன்படும் மிக நவீன பாதுகாப்பு உபகரணங்களாகும். APKWS, வழிகாட்டி இல்லாத ரொக்கெட்டுகளை துல்லியமான ஆயுதங்களாக மாற்றும் தொழில்நுட்பம்.
மார்ச் மாதத்திலும், அமெரிக்கா 16.5 பில்லியன் டொலர் மதிப்பிலான ஆயுத விற்பனையை UAE, குவைத் மற்றும் ஜோர்டான் நாடுகளுக்கு அனுமதித்திருந்தது.
ஆனால், ஈரான் போரில் அதிகளவில் ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதால், எதிர்காலத்தில் சீனாவுடன் தைவான் பிரச்சினையில் மோதல் ஏற்பட்டால், அமெரிக்காவின் ஆயுத கையிருப்பு போதாது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan