புதிய சட்டத்தை அமுல்படுத்திய சீனா
3 வைகாசி 2026 ஞாயிறு 11:40 | பார்வைகள் : 834
அமெரிக்காவுடன் நீண்டகாலமாக நிலவி வரும் வர்த்தக மோதல்களில் புதிய திருப்பமாக, சீனாவின் வர்த்தக அமைச்சகம் (MOC) சனிக்கிழமை தனது முதல் 'Blocking Order' சட்டத்தை நடைமுறைப்படுத்தியது.
இதன் மூலம், அமெரிக்கா விதித்துள்ள தடைகளை சீன நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானுடன் எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஐந்து முக்கிய சீன பெட்ரோ கேமிக்கல் நிறுவனங்களை பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க நிதி அமைச்சகத்தின் OFAC (Office of Foreign Assets Control) இந்த நிறுவனங்களை “Specially Designated Nationals (SDN)” பட்டியலில் சேர்த்து, அவர்களின் சொத்துகளை முடக்கி, பரிவர்த்தனைகளைத் தடை செய்தது.
இதற்கு பதிலளித்த சீனா, வெளிநாட்டு சட்டங்கள் தனது நாட்டின் நிறுவனங்களின் இயல்பான வர்த்தக நடவடிக்கைகளை பாதிக்கக் கூடாது என தெரிவித்துள்ளது
ஐ.நா. அனுமதி இல்லாமல் அமெரிக்கா விதிக்கும் ஒருதலைப்பட்ச தடைகள் சர்வதேச சட்டத்திற்கும், நாடுகளுக்கிடையேயான உறவுகளின் அடிப்படை விதிகளுக்கும் முரணானவை என சீன அரசு தெரிவித்துள்ளது.
இந்த 'Blocking Order' மூலம், சீனா தனது தேசிய சுயாட்சி, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி நலன்களை காக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இந்த நடவடிக்கை, சீனா-அமெரிக்கா வர்த்தக உறவுகளில் புதிய பதற்றத்தை உருவாக்கியுள்ளது
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan