«கிறிஸ்துவ விரோத தாக்குதல்கள் - தண்டனை கடுமையாக இருக்க வேண்டும்» — ஜோன்‑நொயல் பாரோ
2 வைகாசி 2026 சனி 21:36 | பார்வைகள் : 2675
ஜெருசலேமில் ஒரு பிரெஞ்சு கத்தோலிக்க துறவியார் மீது நடந்த வன்முறை தாக்குதலை, வெளிநாட்டு விவகாரங்கள் அமைச்சர் ஜோன்‑நொயல் பாரோ (Jean-Noël Barrot)
கடுமையாக கண்டித்துள்ளார். அவர் இதை «அருவருப்பான செயல்» எனக் குறிப்பிட்டு, பாதிக்கப்பட்டவருக்கு தனது ஆதரவும் விரைவான குணமடைவதற்கான வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

«எங்கள் நாட்டைச் சேர்ந்த துறவியார் சந்தித்த அதிர்ச்சிகரமான தாக்குதலுக்குப் பிறகு, என் ஆழ்ந்த உணர்வையும் ஆதரவையும் தெரிவித்தேன்.. புனித நிலத்தில் அதிகரித்து வரும் கிறிஸ்துவ விரோத செயல்ககளை நிறுத்துவதற்கு , தண்டனை கடுமையாகவும், முன்மாதிரியாகவும் இருக்க வேண்டும். கத்தோலிக்க சமூகங்களையும் புனித தலங்களையும் பாதுகாப்பது பிரான்சின் வரலாற்றுப் பொறுப்பு.»
என X தளத்தில் ஜோன்‑நொயல் பாரோ, தெரிவித்துள்ளார்.
ஒரு சந்தேக நபர் கைது
இந்த தாக்குதல் ஏப்ரல் 28 அன்று, ஜெருசலேமின் பழைய நகரத்துக்கு அருகிலுள்ள டேவிட் கல்லறை பகுதியில் நடந்தது. துறவியார் தள்ளப்பட்டு, பின்னர் தாக்கப்பட்டார். இந்த அருவருப்பான செயலைச் செய்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இஸ்ரேல் காவல்துறை 36 வயதான ஒருவரை அடுத்த நாள் கைது செய்தது.
அதிகரித்து வரும் கிறிஸ்துவ விரோத வன்முறைகள்
இந்த தாக்குதல், சில யூத தீவிரவாதிகளால் மத ஆடையில் உள்ள கிறிஸ்தவ மதகுருமாருக்கு எதிராக, தூறல், துப்புதல், தினசரி தொல்லைகள் அதிகரித்து வரும் சூழலில் இடம்பெற்றுள்ளது, என ஐரோப்பிய தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan