Paristamil Navigation Paristamil advert login

மத்திய கிழக்கு போர் - மிகவும் அதிகமான பதற்ற அபாயம் — வெளி விவகார அமைச்சர்

மத்திய கிழக்கு போர் - மிகவும் அதிகமான பதற்ற அபாயம் —  வெளி விவகார அமைச்சர்

2 வைகாசி 2026 சனி 21:15 | பார்வைகள் : 1313


மத்திய கிழக்கு பிராந்திய பயணத்தின் போது, அபூதாபியில் இருந்து, வெளிநாட்டு விவகாரங்கள் அமைச்சர் ஜோன்நொயல் பாரோ (Jean-Noël Barrot) அளித்த செவ்வியில் , ஹோர்முஸ் நீரிணையில் போக்குவரத்து மீண்டும் தொடங்கவும், பதற்றம் குறையவும் பேச்சுவார்த்தைகள் அவசியம் எனக் கூறினார்.

«போர் மீண்டும் வெடிக்காமல் தடுக்க அனைத்தும் செய்ய வேண்டும்»
«பதற்ற உயர்வு அபாயம் மிகவும் அதிகம்»

«இது உலக பொருளாதாரத்திற்கு பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்
ஈரான் தனது நிலைப்பாட்டை மாற்ற வேண்டும். தற்காலிக நிறுத்தத்தை பயன்படுத்தி அமைதி பேச்சுவார்த்தைகள் தொடர வேண்டும். ஈரான் முழுமையான நிலைப்பாட்டு மாற்றம் செய்ய வேண்டும். பிராந்தியத்துடன் அமைதியாக இணைந்து வாழ முக்கிய தளர்வுகள் வழங்க வேண்டும்»

போன்ற கருத்துக்களும் ஆலோசனைகளும் அமெரிக்கா ஈரான் மீது தனது தாக்குதலை உச்சப்படுத்த இருக்கும் சமயத்தில் ஜோன்-நொயல் பரோவிடமிருந்து வந்துள்ளன.

«ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு- பல நாடுகள் பங்கேற்கத் தயாராக உள்ளன. ஏப்ரல் நடுப்பகுதியில், பிரான்ஸ் மற்றும் ஐக்கிய இராச்சியம் உட்பட பல நாடுகள், ஹோர்முஸ் நீரிணையை பாதுகாக்க நடுநிலை நடவடிக்கை ஒன்றை அமைக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தன.»

«பல  நாடுகள் கண்ணிவெடி அகற்றுதல் மற்றும் கப்பல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் பங்கேற்கத் தயாராக உள்ளன. திட்டமிடல் இறுதிக்கட்டத்தில் உள்ளது. மத்திய கிழக்கு நாடுகளுடன் உறவுகள் வலுப்படுகின்றன. ஈரான் ஏவிய ட்ரோன்களை பிரான்ஸ் தடுத்தது பல  வளைகுடா நாடுகளால் பாராட்டப்பட்டது. இந்நாடுகள் பிரான்சுடன் மேலும் நெருக்கமான பாதுகாப்பு மற்றும் பொருளாதார உறவுகளை உருவாக்க விரும்புகின்றன»
 

என மத்திய கிழக்கில் உள்ள வளைகுடா நாடுகளான சவூதி அரேபியா மற்றும் ஓமான் பயணத்திற்குப் பிறகு,  ஜோன்-நொயல் பரோ தெரிவித்துள்ளார்.