200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் நிச்சய வெற்றி; செல்வப்பெருந்தகை
3 வைகாசி 2026 ஞாயிறு 09:06 | பார்வைகள் : 682
200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று தொடக்க நாள் முதலே கூறி வருவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறி உள்ளார்.
கோவையில் அவர் அளித்த பேட்டி;
இவை அனைத்தும் கருத்துக்கணிப்புகள் அல்ல. இதை நடத்துபவர்கள், தங்களின் பார்வைகளை மற்றவர்கள் மீது திணிக்கின்றனர். நாங்கள் இம்முறை 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவோம். இதை நான் முதல் நாளில் இருந்தே கூறி வருகிறேன்.
அனைத்து தொகுதிகளிலும் ராகுல், மல்லிகார்ஜூன கார்கே, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் பிரசாரம் மேற்கொண்டனர். எங்களின் உழைப்பு வீணாகாது. தேர்தல்கள் முடிந்த பின்னர், இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் காஸ் சிலிண்டர் விலைகள் உயர்த்தப்படும்.
இவ்வாறு செல்வப்பெருந்தகை கூறினார்.
ராகுல் பேச்சை தவறாக மொழி பெயர்த்தது குறித்து செல்வப்பெருந்தகை கூறியதாவது;
எனக்கு தெரிந்த இங்கிலீஷில் தான் மொழி பெயர்த்துச் சொன்னேன். நான் பிரிட்டிஷ்காரன் எல்லாம் கிடையாது. மெத்த படித்தவன் கிடையாது. நாங்கள் எல்லாம் எலிமெண்ட்ரி ஸ்கூலில், அரசு பள்ளியில் படித்தவர்கள். ஓரளவுக்கு மொழி பெயர்க்கிறேன் அல்லவா? இதை பாராட்டாமல் ஏன் விமர்சனம் செய்கிறீர்கள்? நான் என்ன கான்வென்டில், சிபிஎஸ்இயிலா படித்தேன்...? நான் படித்தது எல்லாம் அரசு பள்ளிகள் தான். இதை விமர்சனம் செய்கின்றனர் என்றால் அவர்களின் மனநிலை எப்படி என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan