திரிணமுல் - பாஜ தொண்டர்கள் மோதல்; மறு ஓட்டுப்பதிவில் பரபரப்பு
3 வைகாசி 2026 ஞாயிறு 08:00 | பார்வைகள் : 560
மேற்கு வங்கத்தின் 15 ஓட்டுச்சாவடிகளில் இன்று மறு ஓட்டுப்பதிவு நடைபெற்ற நிலையில், திரிணமுல் காங்கிரஸ் மற்றும் பாஜ தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டதால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
தேர்தல் முறைகேடு புகாரையடுத்து, உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள இரு தொகுதிகளில் மறு தேர்தல் நடைபெற்றது. மக்ரஹட் பாஸ்சிம் தொகுதியில் 11 ஓட்டுச்சாவடிகளிலும், டைமண்ட் ஹார்பர் தொகுதியில் 4 ஓட்டுச்சாவடிகளிலும் இன்று காலை முதல் ஓட்டுப்பதிவு நடைபெற்றது.
மாலை 5 மணி நிலவரப்படி, மக்ரஹட் பாஸ்சிம் தொகுதியில் 86.11 சதவீதமும், டைமண்ட் ஹார்பர் தொகுதியில் 87.60 சதவீதமும் ஓட்டுகள் பதிவாகி இருந்தன. இதனிடையே, திரிணமுல் காங்கிரஸ் தொண்டர்கள் தங்களை மிரட்டுவதாகக் கூறி, பால்டா பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, திரிணமுல் காங்கிரஸ் மற்றும் பாஜ தொண்டர்களிடையே மோதல் வெடித்தது. இதனால், அப்பகுதியில் பதற்றம் நிலவியது. மேலும், அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந் சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் சிலர் கூறுகையில், 'நாங்கள் திரிணமுல் காங்கிரஸிற்குத்தான் ஓட்டு போட்டோம். இருந்தும் அவர்கள் எங்களைத் தாக்கினார்கள். அவரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும். பெண்களுக்கு பாதுகாப்பு தேவை,' என்று அவர்கள் கூறினர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan