Paristamil Navigation Paristamil advert login

விஜய் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்; மாணிக்கம் தாகூர்

விஜய் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்; மாணிக்கம் தாகூர்

3 வைகாசி 2026 ஞாயிறு 05:14 | பார்வைகள் : 1520


சட்டசபை தேர்தலில் தவெக தலைவர் விஜய் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது;  விஜய் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று நான் தொடர்ந்து கூறி வருகிறேன். அவர் தமிழகத்தில் மிகவும் பிரபலமான ஒரு நபர். அவருடைய பேரணிகளிலும், மற்ற இடங்களிலும் ஏராளமான இளைஞர்கள் மற்றும் பெண் வாக்காளர்கள் திரண்டிருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். இதன் காரணமாக அவர் பெரிய தாக்கத்தை நிகழ்த்துவார்.

அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் நம்பகத்தன்மையை இழந்து விட்டார். மோடியும், அமித் ஷாவும் பழி வாங்கும் நோக்கில் திமுகவின் நற்பெயரை கெடுக்க முயற்சிக்கின்றனர். இது விஜய்க்கு அதிமுக ஓட்டுகளையும் பெற உதவுகிறது, இவ்வாறு அவர் கூறினார்